விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும்*  உயர்குருவும்- 
  வெறிதரு பூமகள் நாதனும்*  மாறன் விளங்கியசீர்- 
  நெறிதரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீணிலத்தோர்* 
  அறிதர நின்ற,*  இராமானுசன் எனக்கு ஆரமுதே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று - நம்மாழ்வார் ;(தமக்கு) ப்ரகாசித்தபகவத்குணங்களின் அடைவே அருளிச்செய்த செந்தமிழ் வேதமேயென்று;
இ நீள் நிலத்தோர் அறிதர நின்ற - இப்பெரிய வுலகிலுள்ளார் யாவரும் அறியும்படி நின்ற;
இராமாநுசன் - எம்பெருமானார்;
எனக்கு - அடியேனுக்கு;
ஆர் அமுது - பரம போக்யர்;

விளக்க உரை

உரை:1

நம்மாழ்வாரருளிச்செய்த திருவாய் மொழி தான் நமக்கு ஸர்வஸ்வம்’ என்கிற அத்ய வஸாய முடைய உடையவர் திருத்து அடியேன் அநந்ய போக்யத்வ புத்தியை யுடையேன் என்றாராயிற்று. மாறன் விளங்கிய சீர்நெறிதரும் செந்தமிழாரணம் ஸ்ரீ திருவாய் மொழியில் ஒவ்வொரு திருவாய் மொழியிலும் எம்பெருமானாடைய ஒவ்வொரு திவ்யகுணத்தை வெளியிட்டிருக்கிறார்; அது வெளியிட்டவாறு என்னென்னில், எம்பெருமான் ஆழ்வார்க்கு எந்த க்ரமமாகக் குணங்களை அநுபவிப்பித்தானொ அந்த க்ரமமாகவே இவர் வெளியிட்டாரென்க.

உரை:2

நமக்கு நாம் இன்னார் என்று அறியும் அறிவை அளிக்கவல்லது; நம்மிடம் ப்ரியமாக உள்ளது; அஜ்ஞானத்தை நீக்கவல்லது; ஞானம் ஏற்பட உபாயமாக உள்ளது; அள்ள அள்ள குறைவில்லாத செல்வமாக உள்ளது; “வீடுமின் முற்றவும்” என்று தொடங்கி, “கண்ணன் கழலிணை”, என்பதுவரை நமது நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டு உபதேசித்த காரணத்தினால், நமது தாய்தந்தையைப் போன்றது; அனைத்து வகையிலும் நமக்கு ஏற்ற ஆசார்யனாக உள்ளது; மிகுந்த நறுமணம் வீசும் தாமரை மலரைத் தனது பிறப்பிடமாகக் கொண்ட பெரியபிராட்டிக்கு நாதனான ஸர்வேச்வரன் போன்றும் உள்ளது – இது எது? ஸர்வேச்வரன் தனது கருணை மூலம் நம்மாழ்வாருக்கு “மயர்வற மதிநலம் அருளி”, அத்தகைய நம்மாழ்வார் அவனது ஸ்வரூப-ரூபங்களை நாம் அறியும் வண்ணம் விளக்கிய, தமிழ் வேதமாகிய திருவாய்மொழியே ஆகும். இத்தகைய திருவாய்மொழி மட்டுமே புருஷார்த்தம் என்று இந்தப் பெரிய உலகில் உள்ள அனைவருக்கும் அறிவிக்கும்படியாக எம்பெருமானார் உள்ளார். இப்படிப்பட்ட எம்பெருமானாரே எனக்கு அமிர்தம் போன்று உள்ளார்.

English Translation

The Tamil Veda, Tiruvaimali, sung by Maron Satakopen is the proper path to enjoy the lord's bliss, it is the only wealth to be attained, mother, father, the high teacher,-even the lord of the lotus lady Lakshmi himself. Ramanuja who fought this to the world is our ambrosia.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்