விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எய்தற்கு அரிய மறைகளை* ஆயிரம் இன்தமிழால்- 
  செய்தற்கு உலகில் வரும்*  சடகோபனைச்*  சிந்தையுள்ளே- 
  பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை  உயிர்களெல்லாம்* 
  உய்தற்கு உதவும்*  இராமானுசன் எம்  உறுதுணையே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சடகோபனை - நம்மாழ்வாரை;
சிந்தை உள்ளே - தமது ஹரதயத்தினுள்ளே;
பெய்தற்கு இசையும் - த்யானிப்பதற்கு இணங்கின;
பெரியவர் - ஸ்ரீ மதுரகவிகளுடைய;
சீரை - ஜ்ஞாநாதி குணங்களை;

விளக்க உரை

உரை:1

வேதந் தமிழ்செய்த மாறன் சடகோபனையே வாழ்த்தும் ஸ்ரீ மதுரகவிகளின் பக்தரான எம் பெருமானார் நமக்கு உற்றதுணை யென்றாராயிற்று. இப்பாட்டில் ஸ்ரீ மதுரகவிக்ள பெரியவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டமை நோக்கத்தக்கது. “புதிய மிருவிசும்பும் நின்னகத்த நீ யென் செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய் அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை யென்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாயுள்ளு” (பெரிய திருவந்தாதி) என்று பெரிதான பரப்ரஹமத்தை உள்ளடக்கின பெரியவரை (நம்மாழ்வாரையும்) உள்ளடக்கின பெரியவரிறே மதுரகவிகள்.

உரை:2

சிறந்த ஞானம் உள்ளவர்களுக்கும் அறிவதற்குக் கடினமான ஆழ்பொருள் அடக்கிய வேதங்கள் அனைத்தையும், பெண்கள் – சிறுவர்கள் என்னும் பேதம் இன்றி அனைவரும் கற்கும் விதமாக, ஆயிரம் இனிய பாசுரங்களில் செய்தருளினார். இவர் யார் என்றால் – இவ்விதமாக இந்த வேதங்களை எளிமைப்படுத்தவே இந்த உலகில் அவதாரம் செய்தவரும், மற்ற மதங்கள் என்னும் சடம் (ஒருவிதமான வாயு) நீங்க, சடகோபன் என்ற திருநாமம் கொண்டவரும் ஆகிய நம்மாழ்வார் ஆவார். இப்படிப்பட்ட நம்மாழ்வாரை எப்போதும் தனது உள்ளத்தில், “தேவு மற்று அறியேன்”, என்று வைத்துக் கொள்ளும் தகுதி கொண்டவர் மதுரகவியாழ்வார் ஆவார். இத்தகைய மதுரகவிகளின் உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் அனைத்தையும், இந்த உலகில் உள்ளவர்களை உய்விக்கும் விதமாக அருளியவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட உடையவரே எனக்குத் திடமான துணை ஆவார் (வேறு யாரும் அல்லர்).

English Translation

Madurakavi only desired to enjoy in his heart his master Satakopan who took birth on Earth for the sole purpose of rendering the hard-to-comprehend Vedas into a thousand sweet Tamil songs. Ramanuja showed us the way to the Alvar's feet. He alone is our refuge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்