விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முனியார் துயரங்கள் முந்திலும்*  இன்பங்கள் மொய்த்திடினும்- 
    கனியார் மனம்*  கண்ண மங்கை நின்றானைக்*  கலைபரவும்- 
    தனியானைத் தண் தமிழ்செய்த நீலன் தனக்கு*  உலகில்- 
    இனியானை*  எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீலன் தனக்கு - திருமங்கையாழ்வார் பக்கல்;
இனியானை - ப்ரேம முடையவராய்;
எங்கள் - எங்களுக்குத் தலைவரான;
இராமாநுசனை - எம்பெருமானாரை;
வந்து எய்தினர் - வந்து பணிந்த மஹான்கள்;

விளக்க உரை

அனைத்து ச்ருதி, இதிஹாஸம் மற்றும் புராணங்கள் ஆகியவற்றால் துதிக்கப்படுபவன்; இதனைப் போன்றே ஒத்த வேறு யானை ஒன்று இல்லை என்றுள்ள கம்பீரமான யானை போன்று செருக்குடன் உள்ளவன் – இவன் யார் என்றால், தனது அழகு முழுவதையும் அனைவரும் அனுபவிக்கும்படி, திருக்கண்ணமங்கை என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளி உள்ள பத்தராவிப்பெருமாள் ஆவான். இப்படிப்பட்ட பத்தராவிப்பெருமாளின் ஸ்வரூபம், ரூபம், குணங்கள் ஆகியவற்றைப் பற்றி, அவனை அண்டியவர்களின் தாபங்கள் அனைத்தும் தீரும்விதமாக, இனிய தமிழ் மொழியில் பிரபந்தம் இயற்றியவர் திருமங்கையாழ்வார் ஆவார். இந்த ஆழ்வாருக்கு, இந்த உலகில் உள்ள அனைத்துப் பாகவதர்களையும் விட, பிரியமானவராக உள்ளவர் நமது எம்பெருமானார் ஆவார். என்னைப் போன்றே அனைவரும் உய்ய வேண்டும் என்னும் நோக்கத்துடன் அவதரித்தவர் எம்பெருமானார் ஆவார். எம்பெருமானாரின் ப்ரபாவம் பற்றி அறிந்து, அவரை அண்டிய அனைவரும் பாக்கியம் பெற்றவர் ஆவர், ஏன்? இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு மலை போன்று, அடுக்கடுக்காய்த் துன்பங்கள் ஏற்பட்டாலும், “இந்தத் துன்பங்கள் வந்துவிட்டதே”, என்று புலம்பமாட்டனர்; இதே போன்று அளவிட இயலாத இன்பம் வந்தாலும், “இந்த அதிசயம் நமக்கு உண்டானதே”, என்று துள்ளவும் மாட்டனர்.

English Translation

Tirumangai Alvar, the polific and unique poet Nilan, rendered sweet Tamil songs on the lord of Kannamangai, and other temple towns. Our master Ramanuja was very fond this Alvar. Those who seek refuge in him are neither vexed by misfortune, nor pleased by good fortune.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்