விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து*  தலமுழுதும் கலியே- 
  ஆள்கின்ற நாள் வந்து*  அளித்தவன் காண்மின்*  அரங்கர்மௌலி- 
  சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்ல‌ருளால்* 
  வாழ்கின்ற வள்ளல்*  இராமானுசன் என்னும் மாமுனியே.  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாழ்வு ஒன்று இல்லா மறை - ஒரு குறையுமில்லாதிருந்த வேதமானது;
தாழ்ந்து - (குத்ருஷ்டிகளாலே)இழிவு பெற;
தலம் - முழுதும் பூமியெங்கும்;
கலியே ஆள்கின்ற நாள் - கலியே ஸாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலே;
வந்து - இங்கே வந்தவதரித்து;
 

விளக்க உரை

திருவரங்கத்தில் கண்வளர்கின்ற பெரியபெருமாளின் உத்தமமான திருமேனிக்கு, அலங்கரிக்கத் தகுதி கொண்ட மலர் மாலையை, “இந்த மாலை அவனுக்கு உறுத்துமோ, மணம் சேர்க்குமோ”, என்று சோதிக்கும் விதமாகத் தனது தலையில் சூட்டி, அதனைக் களைந்து அவனுக்கு அளித்தாள் (ஆண்டாள்). இப்படிப்பட்ட ஆண்டாளின் கருணையாலேயே தனது வாழ்வு கொண்டவர் எம்பெருமானார் ஆவார். திருவரங்கத்தில் பங்குனி உத்திர நன்னாளில், அழகிய மணவாளன் ஸ்ரீரங்கநாயகியுடன் சேர்ந்து நின்றபோது அல்லவோ – பகவன் நாராயண – என்று சரணாகதி செய்தார்? இவ்விதமாக, தான் அழகிய மணவாளன் திருவடிகளில் சரணாகதி அடைந்து பெற்ற பலன்கள் அனைத்தையும் இந்த உலகம் முழுமைக்கும் அளித்த வள்ளல் ஆவார். அப்படிப்பட்ட மாமுனிவராக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இராமாநுஜர் செய்தது என்ன? வேதங்கள் அனைத்தும் எந்தவிதமான தாழ்வுகளும் இன்றி இருந்து வந்தன. அப்படிப்படட உயர்ந்த வேதங்கள் மதிக்கப்படாமல், வேதமார்க்கம் என்பது முலையில் சென்றபடி இருந்து. எப்பொது இவ்விதம் ஆனது என்றால் – இருள்தருமாஞாலம் என்ற இந்தப் பூமியைக் கலியுகமானது ஆள்கின்ற காலத்தில் (கலியுகத்தில்) ஆகும். இந்தக் காலத்தில் வேதங்களை மீட்க, பரமபதத்தில் இருந்து வந்து ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்து, இந்த உலகங்களைக் காத்தவர் எம்பெருமானார் ஆவார் என்று உணர்வீர்களாக

English Translation

When the faultless Vedas became faulted and the whole world was ruled by kali alone, there came the benevolent Muni Ramanuja, who lived by the grace of Andal, the girl poet who wore on herself a garland and offered it to the Lord of Arangam, who in turn found it worthy of being wrapped on his crown.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்