விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

     சோராத காதல் பெருஞ்சுழிப்பால்,*  தொல்லை மாலையொன்றும்- 
    பாராத‌வனைப்*  பல்லாண்டென்று காப்பிடும்*  பான்மையன்தாள்- 

    பேராத  உள்ளத்து இராமானுசன் தன் பிறங்கியசீர்*
    சாரா மனிசரைச் சேரேன்*  எனக்கென்ன தாழ்வினியே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறங்கிய சீர் - மிக்க திருக்குணங்களை;
சாரா - தங்களுக்கு அநுபாவ்யமாகக் கொள்ளாத;
மனிசரை - மநுஷ்யர்களை;
சேரேன் - பற்றமாட்டேன்;
இனி - இப்படிப்பட்ட உறுதி பிறந்த பின்பு;
 

விளக்க உரை

உரை:1

பாண்டியராஜனுடைய பண்டித சபையில் எழுந்தருளி “எம்பெருமானே பரதத்தும்” என்று ஸ்தாபநம் செய்து கிழியறுத்துவிட்ட காலத்து, அப்பாண்டியன் தம்மை யானை மேலேற்றி ஊர்வலம் வருவிக்கையில் தம் வைபவத்தைக் காணவந்து ஆகாசத்திலே கருடாரூடனாய் நின்ற திருமாலைச் சேவித்து அப்பெருமானிடத்துள்ள பெருங்காதலாலே ரக்ஷயபூதரான தம்மையம் ரக்ஷகனான் அவனையும் மறந்து, தம்மை ரக்ஷகராகவும் அவனை ரக்ஷ்யனாகவு மெண்ணி அவனுக்குப் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்” டென்று தொடங்கி மங்களாசாஸநம் செய்தருளின பெரியாழ்வாருடைய திருவடிகளையே அநவரதம் தியானித்தருளும் எம்பெருமானாருடைய குணங்களைச் சிந்திக்ககில்லாத மனிசரோடு நான்ஸஹவாஸம் செய்ய மாட்டேண்; இந்நினைவு பிறந்தபின் இனி எனக்கு ஒரு குறையுமில்லை - என்றாராயிற்று.

உரை:2

 என்றும் வாடாத பக்தி பூண்டு (பரிபூர்ணமான பக்தி) , அத்தகைய பக்தி என்ற வெள்ளத்தில் ஏற்பட்ட பெருஞ்சுழி ஒனறில் அகப்பட்டவராக நின்றவர் பெரியாழ்வார் ஆவார். இவர் செய்தது என்ன? இந்த உலகம் என்ற ஸம்ஸாரக் கடலில் விழுந்து அவதிப்படும் ஜீவன்கள் படும் துன்பம் கண்டு இரக்கப்பட்டபடி உள்ளவனை; என்றும் உள்ளவனை; உயர்வற உயர்நலம் உடையவன், நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தான் என்று பலவாறு போற்றப்படுபவனை; “அவன் ஸர்வேச்வரன், அனைத்தும் பொருந்தியவன்”, என்ற ஏற்றத் தாழ்வு பாராமல், சாதாரண மனிதர்களை “தீர்க்காயுஷ்மாந் பவேத்” என்று ஆசி அளிப்பது போன்று, எம்பெருமாளுக்குப் பல்லாண்டு கூறினார். இவ்விதமாக அரங்கனுக்கே, “உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு”, என்று மங்களாசாஸனம் செய்த பெரியாழ்வாரின் திருவடிகளை எம்பெருமானார் தனது மனதில் நீங்காமல் வைத்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் – கிட்டுவதற்கு மிகவும் அரியதான மனிதப் பிறவி எடுத்த போதிலும், நஷ்டத்துடன் கூடியவர்களே ஆவார்கள். இப்படியாக எம்பெருமானாரின் கருணைக்கு இலக்கான எனக்கு, இனி தாழ்வு எவ்விதம் ஏற்படும்? ஒரு குறையும் இன்றி, அனைத்தும் கூடும்

English Translation

Bathed in a foundation of love, Periyalvar sang for the Lord, the Pallandu, "Glory be" Song, brimming with ever-flowing love, heedless of everything else. Ramanuja always bears him in his heart. I shall not find company in lowly men who do not see the greatness of Ramanuja. Now I shall not want.

முன் சந்தி ஆடியோ

  • மேலும் கேட்க
  • பின் சந்தி ஆடியோ

  • மேலும் கேட்க
  • குறிப்புகள்


    ....விரைவில்