விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிற்றி முற்றத்துள் என்று*  நெரித்த கையர் ஆய்*  
    என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும்*  வைதிர் சுடர்ச் சோதி மணிநிறம்ஆய்,*
    முற்ற இம்மூவுலகும்*  விரிகின்ற சுடர்முடிக்கே,* 
    ஒற்றுமை கொண்டது உள்ளம்*  அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னை மீர் - தாய்மார்களே!
நீர் - நீங்கள்
என்னை - என்னைக் குறித்து
முற்றத்துள் - (பெண்ணே!) கூசாமல் முற்றத்திலே வந்து நிற்கிறாயே! என்று அதட்டி
நேரித்த கையர் ஆய் சுற்றியும் சூழந்தும் - கையை நேரித்துக் கொண்டு

விளக்க உரை

‘முற்றத்திலே நிற்கின்றாய்’ என்று நெரித்த கையினையுடையவர்களாய்ச் சுற்றிலும் நின்றுகொண்டும், உங்களிலே விசாரித்துக்கொண்டும் என்னை நீங்கள் வைகின்றீர்கள்; மூன்று உலகங்கள் முழுதும் சுடர்ச்சோதி மணி நிறமாய் விரிகின்ற சுடர் முடிக்கே என் உள்ளம் ஒருப்பட்டது; ‘அதுவாயிற்று’ என்றபடி. தாய்மார்களே! உங்களுக்கு என் பக்கல் விருப்பம் எதற்கு?

English Translation

Ladies, you stand around me with rough hands and abuse me for standing in the porch. My heart is set on the gem-hued Lord whose radiance is spread everywhere; what do you want of me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்