விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொள்கின்ற கோள் இருளைச்*  சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்,* 
    உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்?*  அன்று மாயன் குழல்,*
    விள்கின்ற பூந்தண்துழாய்*  விரை நாற வந்து என் உயிரைக்,* 
    கள்கின்றவாறு அறியீர்*  அன்னைமீர்! கழறாநிற்றிரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விள்கின்ற பூ தண்துழாய் விரை நாறவந்து - அலர்ந்தழகிய குளிர்ந்த திருத்துழாயின் பரிமளம் வீசும்படிவந்து
என்; உயிரை - என் ஆத்மாலை
கள்கின்ற ஆறு - கொள்ளை கொள்ளும் விதந்தை
அன்னைமீர் அறியீர் - தாய்மார்களே! நீங்கள் அறிகிறீர்களில்லை;
கழறா நிற்றிர் - வீணாக் ஏதேனுமொன்றைச் சொல்லிப் பொடிகின்றீர்களே!

விளக்க உரை

உலகத்தை எல்லாம் கொள்ளக்கூடியதான வலிய இருளை எஃகிய செறிந்த இருளின் உள்ளே கொள்ளப்பட்ட நீல நிறத்தையுடைத்தான அழகிய நூலின் திரளோ? அன்று; மாயனுடைய திருக்குழல், மலர்கின்ற பூக்களையுடைய குளிர்ந்த திருத்துழாயினது வாசனையானது பரவும்படி என் உயிரைக் கொள்கின்றவாற்றை அறியீர்கோள்; தாய்மார்களே! இடித்துக் கூறுகின்றீர்கோள்.

English Translation

Are they radiant sunrays that have soaked up the darkness of night? No, they are the dark radiant tresses of the Lord, fragrant with fresh Tulasi blossoms, taking in my soul. Alas! You do not understand this, Ladies, and you abuse me

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்