விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிணக்கி யாவையும் யாவரும்*  பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்* 
    கணக்கு இல் கீர்த்தி வெள்ளக்*  கதிர் ஞான மூர்த்தியினாய், 
    இணக்கி எம்மை எம் தோழிமார்*  விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை* 
    உணக்கி நீ வளைத்தால்*  என் சொல்லார் உகவாதவரே?* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யாவையும் யாவரும் - அசேதனப்பொருள்களும் சேதனைப்பொருள்களுமான ஸகலத்தையும்
பிணக்கி - ஸம்ஹாரதசையிலே ராம்ரூப லிபாகமில்லாதபடி ஒன்றாகப் பிசிறிவைத்து (பிறகு ஸ்ருஷ்டிகாலத்திலே)
பிழையாமல் - ஒருவருடைய கரும்மும் மாறிப் போகாதபடி
பேதித்தும் - தேவயானி மநுஷ்ய யோனி திர்யக்யோனி முதலியபோதங்களைப் பண்ணினவிடத்தும்
பேதியாத்து - அவற்றின்கணுள்ள தோஷங்களால் ஸ்வரூபத்துக்குச் சேதம் வராதபடியான

விளக்க உரை

(பிணக்கியாவையும்) கீழ் ‘ஒருநான்று தடிபிணக்கே‘ என்றதைக் கேட்ட கண்ணபிரான் ‘நங்கைமீர்களா! என்னைத் தடிகொண்டா அடிக்கப்போகிறீர்கள்? பரமஸந்தோஷம்! அப்படிப்பட்ட ஆண்புலிகளைத்தான் நானும் தேடிக்கொண்டு கிடக்கிறேன், தடிபிணக்குக்காரர்கள் எத்தனைவர் வருகிறார்களோ வரட்டும், எனக்கோ தடியும் வேண்டாம் தாம்பும் வேண்டாம், ‘மல்லரைமாட்டிய தேவாதிதேவன்நான்‘ என்பதை இன்று காட்டிவிடுகிறேனா இல்லையா பாருங்கள், அப்படியா ஸமாசாரம்! என்னை யாரென்று நினைத்தீர்கள்? இடையர்கையில் உதைபட்டுப்போகிறவன் நானென்று பார்த்தீர்களோ? அதையுந்தான் ஒருகை பார்த்துவிடுவோமே, என் சரக்கறியாதாரக்கு என் சரக்கை இன்று காட்டியே தீருகிறேன் பாருங்கள்‘ என்று, பெரிய ஆவேசங்கொண்டவன்போலப் படபடத்துப் பேசிநின்றான், அது கண்ட ஆய்ச்சிகள், பிரானே! உன் சரக்கை நாங்கள் அறியாதவர்களாகிலன்றோ இத்தனை ஆரவாரம் நீ செய்யவேண்டும், நீ அறிவிப்பதற்கு முன்னமே எல்லாம் நாங்களே அறிவோங்காண், என்றார்கள், அதுகேட்ட கண்ணபிரான் ‘நீங்களறிந்தவாற்றைச் சொல்லிக்காட்டுங்கள் பார்ப்போம்‘ என்றான், உன்னுடைய மூலகந்தமே பிடித்து நாங்கள் அறிவோங்காண் என்று பீடிகையிட்டுக் கொண்டு அதைச் சொல்லிக்காட்டுகிறார்கள் – “பிணலே ப்ரஸித்தமான பகவத்சக்தி விசேஷித்தை வெளியிடுவன. ஸம்ஹார மையத்திலே ஸகல சேதநாசேதநங்களையும் நரமரூப விபாக ரஹிதமாம்படி கலசி, ஸ்ருஷ்டி ஸமயத்திலே ஒருவர் கருமம் ஒருவர்க்குத் தட்டாதபடி. பிரித்து ஸ்ருஷ்டித்தும் தனக்கொரு தோஷமின்றிக்கே யிராநின்ற ஸர்வஜ்ஞமூர்த்தி நீ என்று நாங்கள் அறிவோம் என்று காட்டினபடி. “***“ என்று உபநிஷத்து ஓதினபடி ஸங்கல்பமாத்ரத்தாலே ஸ்ருஷ்டிஸம்ஹாராதிகளை நிர்வஹிக்கவல்ல பரமசக்தன் என்றவாறு.

English Translation

O Lord of radiant knowledge and countless glories, making all things so different, yet like one! when friends call and I go, you stop and dry us. Alas, what will the unfriendly ones not say?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்