விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது*  கடல் ஞாலம் உண்டிட்ட* 
    நின்மலா! நெடியாய்!*  உனக்கேலும் பிழை பிழையே* 
    வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி*  அது கேட்கில் என் ஐம்மார்* 
    தன்ம பாவம் என்னார்*  ஒரு நான்று தடி பிணக்கே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடல் ஞாலம் உண்டிட்ட - கடல் சூழ்ந்த வுலகங்களையெல்லாம் ஒருகால் திருவயிற்றினுட்கொண்ட
நின்மலா - விமலனே!
நெடியாய் - பெரியோனே!
எங்கள் கையில் பாவை பறிப்பது - எங்கள் கையிலுள்ள லீ லோபகரணங்களை லியப்பிடித்திழுப்பதானது
 
கன்மம் அன்று
 
-
 
செய்யத்தகுந்த காரியமன்று

விளக்க உரை

(கன்மமன்று கீழே “உனக்குமிளைதே கன்மமே“ என்னக் கேட்ட கண்ணபிரான் “என்மேல் உங்களுக்கு இவ்வளவு வெறுப்பாகில் நீங்கள் சுகமாக இருங்கள், நான் போய்வருகிறேன், என்னுடைய வஸ்துக்களை நான் எடுத்துக்கொண்டுபோகிறேன்‘ என்று போயவருகிறேன், என்னுடைய வஸ்துக்களை நான் எடுத்துக்கொண்டுபோகிறேன்“ என்று சொல்லிக்கொண்டே கீழேகிடந்த லீலோபரணங்களை யெடுக்கப்பார்த்தான், உடனே ஆய்ச்சிகள் அவற்றைத் தங்கள் கையிலே யெடுத்துக்கொண்டார்கள், அவனை எளிதில் போகவொட்டுவார்களோ இவர்கள்தாம், மேன்மேலும் பிணக்குக்கு இடம் கொடுக்கவேணுமென்றே இவர்களும் நினைத்திருக்கையாலே இந்த அற்பவஸ்துக்களைக்கொண்டுபோனால் போகட்டும் என்றிராமே ‘எங்கள் வஸ்துவை நீ எப்படியெடுத்துக்கொண்டு போவாய்? என்று சிலுகிட்டு அவற்றைத் தாங்களே வாரியெடுத்துக்கொண்டார்கள், ‘இது நமக்குப் பெருநன்மையேயாயிற்று“ என்று கொண்ட கண்ணபிரான் கைதீண்டிச் சண்டையிட அனுகூலமாகச் செய்யாயிற்று‘ என்று கொண்ட கண்ணபிரான் கைதீண்டிச் சண்டையிட அனுகூலமாகச் செய்தார்களே! என்று உகந்து அவர்கள் கைமேலே கையைவிட்டு அவற்றைப் பறிக்கப் புகுந்தான், அப்போது “கன்மமன்று எங்கள் கையில் பாவைபறிப்பது“ என்கிறார்கள். ‘கன்மமன்று‘ என்றதற்கு இவர்கள் நினைத்தது ஒருபொருள், அவன் கொண்டது வேறொருபொருள் ‘எங்கள் கையிலுள்ள பாவையைப்பறிப்பது நீ செய்யத்தகுந்த காரியமன்று‘ என்கிற பொருளையிட்டு இவர்கள் கன்மமன்று என்கிறார்கள். இது உன்னால் செய்ய முடியும்படியான காரியமன்று என்று இவர்கள் சொல்லுவதாக அவன் கொண்டு, ‘எனக்கு அசக்யமானது மொன்றுண்டோ? என்னை ஆரென்று நினைத்திகோள்? * பாலகனென்று பரிபவஞ்செய்யேல், பண்டொருநாள் ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவனிவன் * என்று என்தாய் பலகாலும் சொல்லுமே, கேட்டறியீர்களோ? கடல்ஞாலமுண்டிட்ட எனக்கு அஸாத்யமானது மொன்றுண்டோ? என்றான்.

English Translation

O perfect Lord who took the Earth and Ocean, pray do not snatchour dolls, you tell us lies and play with us. A fault is a fault even by you, if my brothers hear of this one day, they will take the rod and spare you not for justice or for mercy.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்