விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்*  மாய மாவினை வாய் பிளந்ததும்* 
    மதுவை வார் குழலார்*  குரவை பிணைந்த குழகும்* 
    அது இது உது என்னலாவன அல்ல*  என்னை உன் செய்கை நைவிக்கும்* 
    முது வைய முதல்வா!*  உன்னை என்று தலைப்பெய்வனே?* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வதுவை வார்த்தையுள் - விவாஹப்ரஸ்தாவத்திலே
ஏறு பாய்ந்தனும் - விருஷங்களை மேல்விழுந்து கொன்றதும்
மாயம் மாவினை - கபடமாகக் ருதிரையுருக் கொண்டு வந்த அசுரனை
வாய் பிளந்தும் - வாய்க்கீண்டு ஒழித்ததும்
மதுவை வாதர் குழலார் - மதுவைப் பெருக்குகின்ற கூந்தலையுடைய இடைப் பெண்களோடு

விளக்க உரை

(வதுவை வார்த்தையுள்.) நப்பின்னைப்பிராட்டியை முன்னே நிறுத்தி, ஒருவர்க்குமடங்காத ஏழு ரிஷபங்களைக் காட்டி ‘இவற்றை வரியடக்குமர்க்கு இவளைக் கொடுக்கிறோம்’ என்று ஒரு வார்த்தை வினைத்தவாறே தன்னைப் பேணாதே சென்று அந்தக் காளைகளின்மேலே பாய்ந்தபடி என்!, நறுக்கொண்ட கம்ஸனாலேவப்பட்டுக் குதிரைவடிவு கொண்டு நலிய வந்த கேசியென்னுமகானுடைய வாயைப் பிளந்து முடித்தபடி என்! அந்தநாமங்கநாமந்தரே மாதவோ மாதவம் மாவஞ்சாந்தரேஸங்கநா என்கிறபடியே ஒவ்வொரு கோபியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாக வடிவெடுத்து நின்று ராஜக்ரீடை பண்ணி ஸௌசில்யம் காட்டின அழகு என்!; இன்ன சரிததிரம் இன்ன சரித்திரம் என்று நான் எடுத்தெடுத்துச்சொல்ல வேணுமோ! உன்னுடைய செய்கை எதுவானாலென்ன?’ ‘நீ செய்த செயல்’ என்னுமனதே போதுமானது. அவையெல்லாம் என்னை மிகவும் சிதிலமாக்கா நின்றன; பிரளயத்திலே அழுந்தின ஜகத்தை உண்டாக்கினாப்போலே என்னைத் தரிப்பித்து உன்னையநுபவிக்க வல்லேனாம்படி பண்ணியருளவேணுமென்கிறார். இங்கிதம் நிமிஷதஞ்ச தாவகம் ரம்யமந்புத மதிப்ரயங்கரம் என்ற ஸுக்தா பாஹுஸ்வஸ்ரீஸூக்தி இதில் மூன்றாமடிக்கு சேர அநுஸந்தேயம்.

English Translation

Your killing the bulls for Nappinnai's hand, ripping the jaws of the monstrous horse, your Rasa-play with sweet coiffured Gopis, -these are hard to describe as thus and thus, your many acts thin me. O First-cause of the Universe, when will I joint you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்