விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாள் பரப்பி*  மண் தாவிய ஈசனை,* 
  நீள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொல்,*
  கேழ் இல் ஆயிரத்து*  இப் பத்தும் வல்லவர்* 
  வாழ்வர் வாழ்வு எய்தி*  ஞாலம் புகழவே. (2)   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாள் பரப்பி - திருவடியை விரித்து
மண் தாவிய - பூமியெல்லாம் அளந்து கொண்ட
ஈசனை - எம்பெருமானைக் குறித்து
நீள் பொழில் - உயர்ந்த சோலைகளையுடைய
குருகூர் சடகோபன் - ஆழ்வார்

விளக்க உரை

இத் திருவாய் மொழியை ஓதவல்லவர்கள் உலகமெல்லாங் கொண்டாடும் படியான வாழ்ச்சியைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார். இப்பதிகம் திருவேங்கடமுடையானைக் கவிபாடினதாயிருக்க “தாள்பரப்பி மண்தாவிய வீசனை” என்றது என்னென்னில்; எல்லாரையும் திருவடிகளின் கீழேயிட்டுக்கொள்ளுகைக்காக நிற்கிறநிலையாலும், * கானமும் வானரமுமானவற்றுக்கம் முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிறபடியாலும் திருவேங்கடமுடையானை உலகளந்த பெருமானாகச் சொல்லப் பொருத்தமுண்டென்பர் ஆசிரியர்கள். (வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.) ‘ஞானம்புகழ் வாழ்வர்’ என்றாவது, ‘ஞாலம்புகழ வாழ்வெய்துவர்’ என்றாவது அருளிச்செய்தால் போதுமே; ‘வாழ்வெய்தி வாழ்வர்’ என்றவிது புநருக்தியாவுள்ளதேயென்று சிலர் சங்கிக்ககூடும்: பெறுகிற வாழ்வு இவ்வாத்மாயுள்ளதனைவுமாகும் என்று காட்டுகிறதாகையாலே புநருக்தியில்லை: கைங்கர்ய ஸாம்ராஜ்யமாகிற வாழ்வைப்பெற்று எந்நாளும் அந்த வாழ்வுடனே யிருக்கப் பெறுவர்கள் என்றவாறு. “ஞாலம் வாழ்வெய்திப் புகழ வாழ்வர்” என்று அந்வயித்துப் பொருள்கொள்வதுமுண்டு; அப்போது சங்கைக்கு உதயமேயில்லை.

English Translation

Singing this decad of the thousand songs by peerless kurugur Satakpan on the Lord who strode the Earth, wins a life of praise from all.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்