விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வைத்த நாள் வரை*  எல்லை குறுகிச் சென்று,* 
    எய்த்து இளைப்பதன்*  முன்னம் அடைமினோ,*
    பைத்த பாம்பு அணையான்*  திருவேங்கடம்,* 
    மொய்த்த சோலை*  மொய்பூந்தடந் தாழ்வரே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வைத்த - (பாகவதர்களே!) (உங்களுக்குச்) சங்கற்பித்துவைத்த
நாள் - ஆயுட்காலத்தினுடைய
வரை - அளவான
எல்லை - எல்லையானது
குறுகி - அணுகி

விளக்க உரை

பரமபோக்யமான திருமலையையே பரமப்ராப்யமாகப் பற்றுங்களென்று பிறர்க்கு உபதேசிக்கிறார். எம்பெருமான் சேதநர்களுக்குக் கரணகளேபரங்களைக் கொடுத்து ஆயுளையயும் அருளுகிறான்; இவை எதற்காகவென்னில்,திருமலை முதலான திருப்பதிகளிலே சென்று வழிபாடு செய்வதற்காகவேயன்றி வேறொரு காரியத்திற்காகவன்று. ஆயினும், உலகர் உடலில் வலிவுள்ள காலங்களில் விஷயாந்தரங்களிலே மண்டிக்கிடந்து, திவ்யதேச வழிபாடுகளைப் பற்றிப் போகப்போகப் பார்த்துக்கொள்வோம் என்று பதற்றமற்று ஆறியிருந்து விடுகிறார்கள்; பார்த்துக்கொண்டிருக்கும் போதே வல வகைகளிலும் தளர்ச்சிவந்து சேர்கின்றது; அப்போது திவ்யதேச வழிபாட்டை நெஞ்சிலும் நினைக்க ப்ரஸக்தியில்லையாகிறது. அங்ஙனம் ஆகாமே திருமலையைப் பணிமின் என்றாராயிற்று. எம்பெருமானுக்குப் பரமபோக்யமான சயனமாகத் திருவனந்தாழ்வான் இருக்கவும் அவனையும் விட்டுத் திருமலையில் வாஸம் மிகவும் ருசித்தது என்பதை மூன்றாமடி காட்டும். கீழ்முதற்பாட்டில் ப்ரஸ்தாவிக்கப்பட்ட கைங்கர்யத்தைச் செய்யுமவர்கள் ஆயாஸமின்றிக்கே மிகவும் இனிதாகச் செய்வதற்குப் பாங்கானவிடம் திருமலை என்பதைக்காட்டும் ஈற்றடி.

English Translation

Before your numbered days are spent, before old age saps your strength, reach for the lotus feet of Venkatam, the Lord of hooded serpent bed.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்