விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொல்லா மாக்கோல்*  கொலைசெய்து பாரதப் போர்,* 
  எல்லாச் சேனையும்*  இரு நிலத்து அவித்த எந்தாய்,*
  பொல்லா ஆக்கையின்*  புணர்வினை அறுக்கல் அறா,* 
  சொல்லாய் யான் உன்னைச்*  சார்வது ஓர் சூழ்ச்சியே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கொல்லா - கொல்லுகைக்குக் கருவியல்லாமல்
பா - குதிரையை நடத்துவதான
கோல் - சாட்டையே கருவியாக
கொலை செய்து - (எதிரிகளை) முடித்து
பாரதம் போர் - பாரத யுத்தத்தில்

விளக்க உரை

ஸ்ரீவாமன மூர்த்தியான காலத்தில் தப்பினவர்களையும் விஷயீகரீப்பதற்காக ஸ்ரீக்ருஷ்ணனாய் வந்து அவதரித்த காலத்திலும் தப்பினேனென்கிறார். பாரதப்போரில் பஞ்சபாண்டவர்களே எதிரிகளை முடித்தார்கள் என்று அவிவேசிகள் நினைப்பார்கள்; அவர்களை வியாஜ மாத்திரமாக வைத்துக்கொண்டு கண்ணபிரானே பூமியின் பாரங்களைத் தொலைத்தருளினன் என்பது உண்மை; அப்போது கண்ணபிரானது திருக்கையில் ஒரு கோல் இருந்தது; அதுதான் துரியோதனாதியரைக் கொலை செய்யக் கருவியாயிருந்தது, அதனை ஆழ்வார் இங்குக் “கொல்லாமாக் கோல்” என்கிறார். கொல்லுகைக்குக் கருவியாக அல்லாமல் குதிரையை நடத்தக் கடவதான முட்கோலாலே கொலை செய்ததாக அருளிச் செய்கின்றார். இங்கு உணர வேண்டிய விஷயமாவது:- கண்ணபிரான் பள்ளிகொண்டிருக்கும்போது துரியோதனனும் அர்ஜுநனுமாகக் கடைத்துணை வேண்டிவந்தார்கள். துரியோதனன் தான் மஹாப்ரபுவாகையாலே திருமுடிப் பக்கத்திலே யிருந்தான். அர்ஜுநன் திருவடி வாரத்திலேயிருந்தான். கண்ணபிரான் பள்ளியுணர்ந்து எழுந்தவுடனே திருவடி வாரத்தில் அர்ஜுநனை முந்துறு முன்னம் கடாக்ஷிக்கும்படியாயிற்று. பிறகு துரியோதனனையும் பார்த்தான். இருவரையும் குசலப்ரச்நம் பண்ணிவிட்டு ‘நீங்கள் இங்கு வந்த காரியம் என்?, என்று கேட்கையில், துரியோதனன் ‘நான் முன்னே வந்தேன்; என் காரியமே முக்கியமாகச் செய்யவேணும்’ என்ன; அது கேட்ட கண்ணபிரான் ‘நீ முன்னம் வந்திருக்கலாம்; ஆனாலும் நான் முன்னம் பார்த்தது அர்ஜுனனையே; அது கிடக்கட்டும்; உங்களுடைய அபேக்ஷிதம் இன்னதென்று சொல்லிக் கொள்ளுங்கள்’ என்ன; ‘இப்போது நடக்கப்போகிற யுத்தத்திற்குத் துணை செய்ய வேண்டும்’.

English Translation

O Lord who steered the chariot in the battlefield. Smiting death to the wicked in the Bharata war! Pray tell me how I may join your feet, cutting as under my bodily connexions.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்