விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வன் மா வையம் அளந்த*  எம் வாமனா,*  நின் 
    பல்மா மாயப்*  பல் பிறவியில் படிகின்ற யான்,*
    தொல் மா வல்வினைத்*  தொடர்களை முதல் அரிந்து,* 
    நின் மா தாள் சேர்ந்து*  நிற்பது எஞ்ஞான்றுகொலோ?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வல் - வலிமைதாங்கிய
மா - பெரிய
வையம் - பூமியை
அளந்த - (மஹாபலியிடத்தில் பிக்ஷை பெற்று) அளந்து கொண்ட
எம் வாமனா - எமது வாமனமூர்த்தியை

விளக்க உரை

ஜலஸ்தல விபாகமில்லாமல் எல்லார் தலைமேலும் நீ திருவடிகளை வைத்தருளின காலத்தையும் தப்பின நான் இனி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்றைக்கோ வென்கிறார். இங்கே ஈட்டின அவதாரிகை பரமபோக்யம். அதாவது- “உம்முடைய உடம்புகொண்டு நாமிருந்தவிடத்தே வந்துகிட்ட மாட்டிற்றிலீராகில் நம்முடம்பைக் கொண்டு நீரிருந்தவிடத்தே வந்துகிட்டினோமே; வாமந வேஷத்தைக் கொண்டு மஹாபலி முன்னே வந்து நின்றோமே; அங்கே கிட்ட மாட்டிற்றிலீரோவென்ற அதுக்கும் தப்பினேனென்கிறார்” என்று. மிகக் கடினமான பூமிப்பரப்பை யெல்லாம் மெல்லிய திருவடிகளாலே அளந்து, அந்தச்செயலாலே என்னை யீடுபடுத்திக்கொண்ட வாமன மூர்த்தியே! யாவரையும் மயக்க நீ வைத்த மூலப்ரக்ருதியிலே தேவ மநுஷ்யாதி ரூபத்தாலே பலவகைப்பட்ட பிறப்புக்களில் சிக்கிக்கொண்டே கிடக்கிற நான், ஸர்வேஸ்வரனான உன்னாலும் அறுக்க முடியாதபடியான பாபத் தொடர்ச்சிகளை முதலிலே யறுத்து உன்னுடைய திருவடிகளைச் சேர்த்து நான் நிலைபெருவது என்றைக்கோ என்றாராயிற்று. இப்பாசுரத்தின் இனிமையே வடிவெடுத்த ஆறாயிரப்படி காண்மின்:- “இப்படி நீ தந்த உபகரணத்தைக்கொண்டு பின்னையும் நான் ஸம்ஸார ஸமுத்திரத்திலே போய்விழுமளவில் என்னை யெடுத்தருளுகைக்காக இங்கே புகுந்தருளினாய்; பின்னையும் உனக்கெட்டாததொருபடி நான் அந்த ஸம்ஸாரமாகிற கடலினுள்ளே போய் அழுந்தா நின்றேன். இப்படிக் கடலிலே யழுந்துகைக்கு ஹேதுவாய் அநாதிஸித்தமாய் மஹாபலவத்தாயிருந்த என்னுடைய பரப பரம்பரைகளை முதலரிந்து உன்னுடைய நிரவதிக போக்யமான திருவடிகளை நான் சேர்ந்து பிள்ளை யொருகாலமும் பிரியாதே நிற்பது என்றோவென்கிறார்.

English Translation

O Vamana who measured the wide Earth! I am fallen in Maya, suffering countless rebirths. Cutting the endless Karmas that follow me doggedly, when will find you lovely lotus-feet?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்