விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தீர்த்தன் உலகு அளந்த*  சேவடிமேல் பூந்தாமம்,* 
  சேர்த்தி அவையே*  சிவன் முடிமேல் தான் கண்டு,*
  பார்த்தன் தெளிந்தொழிந்த*  பைந்துழாயான் பெருமை,* 
  பேர்த்தும் ஒருவரால்*  பேசக் கிடந்ததே?        

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தீர்த்தன் - பரம பவித்திரனான கண்ணபிரானுடைய
உலகு அளந்த சே அடி மேல் - உலகமளந்த திருவடிகளிலே
பூ தாமம் - புஷ்பமாலையை
பார்த்தன் - அர்ஜூனன்
சேர்த்தி - ஸமாப்பித்து

விளக்க உரை

“தேவாதி தேவபெருமான்” என்று கீழ்ப்பாட்டில் ப்ரஸ்தாவிக்கப்பட்ட பெருமேன்மை, பண்டே அர்ஜூனன் நிரூபித்து நிர்ணயித்த விஷயமாதலால், மிக ப்ரஸித்தமர்னவதில் மற்றையோருடைய ஆராய்ச்சி வேணுமோவென்கிறார். மஹாபாரத யுத்தத்தில் அர்ஜூனனுக்குப் பாசுபதாஸ்த்ரம் வேண்டியிருந்தது; சிவபிரானை ஆராதித்து அதனைப் பெறவேணுமென்று அவன் முயற்சி செய்யப் போகையில், இவனுக்கு இத்தனை பாரிச்ரமம் ஏதுக்கு என்று கருணை கொண்ட கண்ணபிரான், அவ்வாஜூனனை நோக்கி, ‘ருத்ரனிடத்தில் நீ செய்ய நினைத்திருக்கிற ஆராதனையை என் காலிலே செய்து அபேக்ஷிதம் பெறுவர்யாக’ என்று கட்டளையிட்டுத் தனது முழந்தாளைக் காட்ட, அங்கேயவன் சில புஷ்பங்களையிட்டு அர்ச்சிக்க, அவற்றை யிரவு கனவிலே உருத்திரக்கடவுள் அந்த புஷ்பங்களைத் தனது தலையிலே அணிந்து கொண்டு வந்து காட்சி தந்து, அஸ்த்ரப்ர தானம் பண்ணினதாகச் சொல்லப்படுகிற கதை இங்கு உணரத்தக்கது. ருத்ரன் எம்பெருமானுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை முடிமேல் தரித்து சிவனாயினான் என்பதையும் இங்கு ஜ்ஞாபிக்க வேண்டி “தீர்த்தனுலகளந்த சேவடி” என்றார். “குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்ப்பெய்து, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக்-கறைகொண்ட கண்டத்தான் சென்னி மேலேறக் கழுவினான், அண்டத்தான் சேவடியை யாங்கு” என்ற திருமழிசைப்பிரான் பாசுரம் இங்கு நோக்கத்தக்கதாகும்.

English Translation

When Arjuna strewed flowers of the Lord's feet, he saw them being borne by Siva on his head. Now must I speak of the glories of my Lord. the Earth-measuring one?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்