விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓவாத் துயர்ப் பிறவி*  உட்பட மற்று எவ் எவையும்,* 
    மூவாத் தனி முதலாய்*  மூவுலகும் காவலோன்,*
    மா ஆகி ஆமை ஆய்*  மீன் ஆகி மானிடம் ஆம்,* 
    தேவாதி தேவ பெருமான்*  என் தீர்த்தனே.         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓவா துயர் - இடைவிடாத துக்கத்தை விளைக்கிற
பிறவி உள்பட - ஜன்மம் முதலாக
மற்று எவ்வெவையும் - மற்றுமுள்ளவை யெல்லாவற்றுக்கும் (அதாவது ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளுக்கென்றபடி)
மூவா - ஒரு நாளும் கைவாங்காத
தனி முதல் ஆய் - அஸஹாய காரண பூதனாய்க் கொண்டு.

விளக்க உரை

முதற்பாட்டில் “இணைவனா மெப்பொருட்கும்” என்றது. இப்பாசுரத்தினால் விவாரிக்கப்படுகிறது. ஹயக்பீவ மத்ஸ்ய கூர்ம ராமக்ருஷ்ணாதிரூபத்தாலே திருவவதாரங்கள் பண்ணி மூவுலங்களையுங் காத்தருள்பவனென்கிறது. ஓவாத்துயர்ப் பிறவியுட்பட மற்றெவ்வெவையும் முவாத்தனிமுதலாய்- இடையறாத துயரத்தை விளைக்கின்ற பிற்பபைத்தருதலாகிற ஸ்ருஷ்டியென்ன, மற்றும் ஸம்ரக்ஷணம் ஸம்ஹாரம் முதலான செயல்களென்ன ஆகிய எல்லாவற்றிற்கும், ஒரு நாளும் சோம்பிக்கைவாங்காத அத்விதீய காரணபூதன் என்றபடி. மூவாத்தனிமுதலாய்- கீழ்ச்சொன்ன ஸ்ருஷ்டி ஸ்திதி ஸ்ம்ஹாராதிகளை நடத்துமிடத்து, வேறோரு உபகரணத்தை வேண்டாத நிரபேக்ஷ நிர்வாஹகன் என்றபடி. மூவா என்பதை முதலடியோடுங் கூட்டிப் பொருள் கொள்ளலாம். இரண்டாமடியோடுங் கூட்டிப் பொருள் கொள்ளலாம் என்று நம்பிள்ளை திருவுள்ளம். முதலடியோடு கூட்டுகிற பக்ஷத்தில், மூவாத எவ்வெவற்றுக்கும் தனி முதல் என்றபடியாய் ப்ரவாஹநித்யங்களான ஸகல வஸ்துக்களுக்கும் தனி முதல்வன் என்றபடி; இரண்டாவதுபக்ஷத்தில் மூவா என்றவிது தனி முதலுக்கு விசேஸணமாகிறது; ஒரு நாளுங்கைவாங்காத தனி முதல்வனென்றபடி. கை வாங்குவதற்கு ப்ரஸக்தி யுண்டோவென்னில் இங்கே ஈடு முப்பத்தாறாயிரப்படி காண்மின்;- “தான் தன் பக்கலிலே வழிபட வேணுமென்று நினைத்து உபகரணங்களைக் கொடுத்துவிட, கொடுத்த உபகரணங்களைக் கொண்டு வழி கெட நடவா நின்றால் ‘இப்போது இங்ஙனே போயிற்றதாகில் க்ரமத்திலே நம் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து மீட்டுக் கொள்ளுகிறோம்’ என்று அநுமதி தானத்தைப் பண்ணி உதாஸீநனா யிருக்கும் இப்படி தன்னினைவைத் தப்பிப்போரச் செய்தேயும், கர்ஷகனா யிருக்கும்வன் ஒருகால் பதர்த்ததிறே யென்று சோம்பிக் கை வாங்காதே மேலே மேலே கோலுமாப்போலே ‘ஒரு காலல்லா வொரு காலாகிலுமாகிறது’ என்று ஸ்ருஷ்டியா நிற்கும். சோம்பாது இப்பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா என்னக் கடவதிறே.” இப்படி எம்பெருமான் ஸ்ருஷ்டித்து ரக்ஷித்து, கீழும் மேலும் நடுவுள்ள-அல்லது, க்ருதகம் அக்ருதகம் க்ருதகாக்ருதகம் என்கிற மூவுலகையு மென்கிறார் மூவுலகுங் காவலோன் என்று. இப்படி ரஷிப்பது தன் மேன்மை குலையாமே யிருந்தன்று; அவதார முகத்தாலே யென்கிறார் பின்னடிகளில்

English Translation

The Lord of gods, my holy one beyond the cycles of miserable birth, came as a frutle. fish and men. He shall come as Kaliki too!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்