விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கண்ணுள்ளே நிற்கும்*  காதன்மையால் தொழில்,* 
  எண்ணிலும் வரும்*  என் இனி வேண்டுவம்?*
  மண்ணும் நீரும்*  எரியும் நல் வாயுவும்* 
  விண்ணும் ஆய் விரியும்*  எம் பிரானையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய் - பூமி முதலிய பஞ்ச பூதங்களையும் சரீரமாகவுடையனாயிக் கொண்டு
விரியும் - ஜகத்தாகப் பரம்புகின்ற
எம் பிரானை - எம்பெருமானை
காதன்மையால் தொழில் - பக்தியோடு தொழுதால்
கண்ணுள்ளே - (அவன்) நான் காணும்படி இருப்பன்;

விளக்க உரை

பூமியும் தண்ணீரும் நெருப்பும் சிறந்த காற்றும் ஆகாயமும் ஆகிய இவற்றின் உருவமாக விரிகின்ற எம்பிரான், பரம பத்தியோடு வணங்கினால் வணங்குகிறவர்களுடைய கண்களிலேயே நிற்பான்; ஒன்று இரண்டு என்பன முதலாக எண்ணுமிடத்தும் வருவான்; இறைவன் தன்மை இதுவான பின்னர், நாம் அவனிடத்தில் இரந்து வேண்டும் குறை யாது உளது?

English Translation

My Lord unfolds himself as Earth, water, fire wind and sky. Whenever worship him with love, he enters into my eyes and fills my heart. What more do I want?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்