விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொருமா நீள் படை*  ஆழி சங்கத்தொடு,* 
    திருமா நீள் கழல்*  ஏழ் உலகும் தொழ,*
    ஒரு மாணிக் குறள் ஆகி,*  நிமிர்ந்த,*  அக் 
    கரு மாணிக்கம்*  என் கண்ணுளது ஆகுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீள் படை - சிறந்த ஆயுதமாகிய
ஆழி சங்கத்தொடு - சங்கு சக்கரங்களோடுகூட
திருமா நீள் கழல் - தனது மிகச்சிறந்த திருவடிகளை
ஏழ் உலகும் தொழ - ஸகலலோகமும் தொழும்படியாக
ஒரு மாணி குறள் ஆகி நிமிர்ந்த - ஒப்பற்ற பிரமசாரி வாமனனான் வளர்ந்தருளின

விளக்க உரை

பகைவர்களோடு போர் செய்கின்ற பெருமை பொருந்திய நீண்ட ஆயுதங்களான சக்கரம் சங்கு என்னும் இவற்றோடு, செல்வத்தைத் தருகின்ற பூஜிக்கத் தக்க நீண்ட திருவடிகளை ஏழுலகத்துள்ளாரும் தொழுது வணங்கும்படி, ஒப்பற்ற பிரமசரிய நிலையையுடைய குட்டையனாகி, பின் வளர்ந்த அந்தக் கரிய மாணிக்கம் போன்ற இறைவன் என் கண்களில் இருக்கின்றவன் ஆனான்.

English Translation

I saw in my eyes the dark gem-hued Lord, resplendent with the war-waging discus and conch. He came as a manikin then and strode the Earth with great feet, O. How he grew and became worshipped by the seven worlds!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்