விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை,* 
  நடுவே வந்து*  உய்யக் கொள்கின்ற நாதனை,*
  தொடுவே செய்து*  இள ஆய்ச்சியர் கண்ணினுள்,* 
  விடவே செய்து*  விழிக்கும் பிரானையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் விளக்கை - எனக்கு எல்லாப் பொருள்களையும் விளக்கிக் காட்டுகிற விளக்குப்போன்றவனும்
என் ஆவியை - என் உயிராயிருப்பவனும்
நடுவே வந்து - திடீரென்று ஒநாளிலே
உய்யக்கொள்கின்ற நாதனை - உஜ்ஜிவிப்பிக்னற ஸ்வாமியும்
தொடுவே செய்து - கபடச் செயல்களையே செய்து

விளக்க உரை

‘எனக்கு விளக்காய் இருக்கின்றவனை, எனது உயிரை, இடையிலே வந்து உய்யக்கொண்ட தலைவனை, ஆராய்ச்சி உண்டாக்கத் தக்க செயல்களைச் செய்து அதனைக் காண அங்கு வந்து சேர்ந்த இளம்பருவம் வாய்ந்த ஆயர் மகளிருடைய கண்களில் தூது விடுதலைச் செய்து, அதனால் கண்களோடு கண்கள் கலக்கும்படி பார்க்கின்ற உபகாரங்களை நான் விடுவனோ?’ என்கிறார்.

English Translation

The Lord who appeared before the cowherd-girls like on elf and played mischief with them, is my light and soul. Oh! How can I leave him now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்