விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிரான்*  பெரு நிலம் கீண்டவன்,*  பின்னும் 
    விராய்*  மலர்த் துழாய் வேய்ந்த முடியன்,*
    மராமரம் எய்த மாயவன்,*  என்னுள் 
    இரான் எனில்*  பின்னை யான் ஒட்டுவேனோ?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிரான் - உபகாரகனும்
பெருநிலம் - (வராஹாவதாரத்தில்)
கீண்டவன் - பெரிய பூமியைப் பிளந்தெடுத்தவனம்
பின்னும் - பின்னப்பட்ட (தொடுக்கப்பட்ட)
வீராய் - பரிமளம் பொருந்திய

விளக்க உரை

 ‘பிரளயவெள்ளத்திற்புக்கு உலகத்தைக் கோட்டாற்குத்தி எடுத்து வந்தவனும், உபசாரகனும், அதற்குமேல், மலர்கள் கலந்த திருத்துழாய் மாலையினை அணிந்த முடியையுடையவனும், மராமரங்கள் ஏழனையும் எய்த ஆச்சரியமான செயலையுடையவனும் ஆன எம்பெருமான் என் மனத்தில் ‘இரேன்’ என்பானாயின், அவன் என்னை விட்டுப் பிரிந்து செல்வதற்கு யான் உடன்படுவேனோ!’ என்கிறார்.

English Translation

He lifted the Earth from the deluge waters. He pierced an arrow through seven trees. What a wonder! The Lord who wears the fragrant Tulasi on his crown has entered into my heart, will I ever let him go?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்