விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தான் ஓர் உருவே தனிவித்தாய்*  தன்னின் மூவர் முதலாய* 
  வானோர் பலரும் முனிவரும்*  மற்றும் மற்றும் முற்றும் ஆய்*
  தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி*  அதனுள் கண்வளரும்* 
  வானோர் பெருமான் மா மாயன்*  வைகுந்தன் எம் பெருமானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முனிவரும் - ரிஷிகளும்
பலரும் - பல  சேதனர்களும்
மற்றும் - மற்ற மானிடசாதியும்
மற்றும் - மற்ற மிருகம் பறவை முதலான
முற்றும் ஆய் - எல்லாமுமாகி

விளக்க உரை

தானே காரணன், ஒரு காரணன், தனித்த காரணனாகி, தன் சங்கற்பத்தால் தோன்றின பிரமன் சிவன் இந்திரன் மூவரும், அம்மூவர் முதலாக எண்ணப்படுகின்ற தேவர் பலரும், முனிவர்களும், மனிதர்களும், விலங்குகளும், ஏனைய நிலையியற்பொருள்கள் முதலான எல்லாப் பொருள்களும் உண்டாவதற்காகத் தானே தன்பக்கல்நின்றும் ஒப்பு அற்ற பெரிய வெள்ளத்தினை உண்டாக்கி, அதன்கண் அறிதுயில் செய்கின்ற நித்தியசூரிகள் தலைவன்; மிகப்பெரிய ஆச்சரியமான செயல்களையும் குணங்களையுமுடையவன்; அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டில் இருப்பவன்; அவன் எனக்கு உபகாரத்தைச் செய்த தலைவனாவான்.

English Translation

The Lord of celestials, Lord of Vaikunta, my own Lord, himself became the cause of the three. –Brahma, Siva, Indra, -within him. He caused the celestials, and sages and the living, and all else to be, then appeared in the deep ocean sleeping on a serpent couch.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்