விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மின்இடையாள் நாயகனை விண்நகருள் பொன்மலையை,*
  பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,*
  தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,*
  மன்னிய தண்சேறை வள்ளலை, -மாமலர்மேல்-

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாமரை மேல் மின் இடையாள் நாயகனை - தாமரைப்பூவில் பிறந்தவளும் மின் போன்ற இடையை யுடையளுமான பிராட்டிக்கு நாயகனாய்
விண்ணகருள் பொன் மலையை - திருவிண்ணகரிலே பொன்மலை போல் விளங்குமவனாய்
பொன்னி மணி கொழிக்கும் பூ குடந்தை போர் விடையை - காவேரி நதியானது ரத்னங்களைக் கொண்டு தள்ளுமிடமான அழகிய திருக்குடந்தையிலே யெழுந்தருளியிருக்கிற
யுத்த ஸந்நத்தமான காளை போலச் செருக்குடையனாய்
தென் நன் குறுங்குடியுள் செம்பவளம் குன்றினை - தென் திசையிலுள்ள விலக்ஷணமான திருக்குறுங்குடியிலே சிவந்த பவழமலைபோல விளங்குமவனாய்,
தண் சேறை மன்னிய வள்ளலை - குளிர்ந்த திருச்சேறையிலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற பரம உதாரனாய்,

விளக்க உரை

விசேஷணங்களால் விபவாவதார சரித்திரங்களிற் சிலவற்றைப் பேசி இனி அர்ச்சாவதாரங்களிலுஞ் சிலவற்றை அநுசந்திக்க விரும்பித் திருவிண்ணகரிலே வாய்வைக்கிறார். பல திருப்பதிகளையும் பற்றி அருளிச் செய்துகொண்டு போகிற இக்கண்ணிகளில் “கோயில் திருமலைபெருமாள் கோயில்“ என்னும் அநாதி வ்யவஹாரத்திற்கு ஏற்ப, “மன்னுமரங்கத்தெம் மாமணியை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும் “மின்னி மழை தவழும் வேங்கடத்தெம் வித்தகனை“ என்ற வளவில் ஒரு பகுதியாகவும், “வெஃகாவிலுன்னிய யோகத்துறக்கத்தை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும், அதற்குமேல் வினைமுற்று வருமளவில் ஒரு பகுதியாகவும் பிரித்துக்கொண்டு உரையிடுகின்றோம். விண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி. “தன்னொப்பாரில்லப்பன்“ என்று நம்மாழ்வார்ருளிச் செயல் “ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலா வென்னப்பா!“ (திருக்கண்ணப்புரத்துப் பாசுரத்தில்) என்றார் இத்திருமங்கையாழ்வாரும். உப்பிலியப்பன் என்கிற வ்யவஹாரம் ஸ்தர புராணத்தையடி யொற்றிய தென்பர். குடந்தை – குடமூக்கு என்றும் கும்பகோணமென்றும் வழங்கப்படும் தலம் குறுங்குடி – குறிகியவனான வரமநனது க்ஷேத்ரமாதலால் குறுங்குடியெனத் திருநாம்மாயிற்றென்பர். இத்தலத்தெம்பெருமான் ஸ்ரீ பாஷ்யகார்ர் பக்கலிலே சிஷ்யனாய் “நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்“ என்கையாலே வைஷ்ணவ நம்பியென்று திரநாமம் பெற்றனன். நம்மாழ்வார் திருவ்வதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தத்து நம்பியே. சேறை – பஞ்சஸார க்ஷேத்ரமென வழங்கப்படும். ஆலி –எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனஞ் செய்துகொண்ட திவ்யதேசமானது பற்றித் திருவாலியென வழங்கப்படுமென்பர், ஆலிங்கனம் என்பதன் ஏகதேசம் நாம்மாயிற்று. எவ்வுள் –எம்பெருமான் சாலிஹோத்ர மஹாமுனிக்கு ப்ரத்யக்ஷமாகி “வாஸம் பண்ணுவதற்குத் தருதியான உள் எவ்வுள்? என வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளுரென்று திருநாம்மாயிற்றென்ப கிம்க்ருஹம் எனபர் வடமொழியில்

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்