- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த*
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை,*
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க,*
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்,*
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை,*
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்,*
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்,*
தன்னினுடனே சுழல மலை திரித்து,* ஆங்கு-
இன் அமுதம் வானவரை ஊட்டி,* அவருடைய-
மன்னும் துயர் கடிந்த வள்ளலை,* மற்று அன்றியும்.-
காணொளி
பதவுரை
மன்னு இ அகல் இடத்தை - எல்லாரும் பொருந்தி யிருக்கின்ற விசாலமான இப்பூமியை
மா முது நீர் விழுங்க - மஹா ஸமுத்ரம் விழுங்கிவிட
பின்னம் - அதற்கு பிறகு
ஓர் எனம் ஆய் புர்கு - ஒரு திவ்யவராஹமாய் (கடலினுள்ளே) பிரவேசித்து
வளை மருப்பின் - வளைந்த கோட்டினுடைய
விளக்க உரை
வைத்தெடுத்த கூத்தனை –பூமியைக் கோட்டின் நுனியில் வைத்துக்கொண்டு எழுந்தருளும் போது அகமகிழ்ச்சி தோற்றக் கூத்தாடிக்கொண்டே யெழுக்கருளின்ன்போலும். மாசுணம் என்று பாம்புக்கும் பெரிய பாம்புக்கும் பெயர். கடலைக்கடைய மந்தரமலையைச் சுற்றின போது அது சுழன்ற விசையின் மிகுதியினால் இரு குடர் விண் முதலிய ஸகல பதார்த்தங்களும் கூடவே சுழன்வனபோலத் தோற்றினமைபற்றி “மின்னுமிருசுடரும் தன்னினுடனே சுழல மலைதிரித்து“ ஒன்றார்.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்