விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,*
  அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,*
  மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,*
  முன்னாய தொண்டையாய் கெண்டைக் குலமிரண்டாய்,*
  அன்ன திருவுருவம் நின்றது அறியாதே,*
  என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்,*
  பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு*
  மன்னும் மறிகடலும் ஆர்க்கும்,*  -மதியுகுத்த- 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மன்னு மறி கடலும் ஆர்க்கும் - சலியாததும் மடிந்து அலையெறிவதுமான கடலும் கோஷம் செய்யா நின்றது
மதி உகுத்த இன் நிலாவின் கதிகும் - சந்திரன் வெளியிடுகின்ற இனிய நிலாவின் ஒளியும்
என் தனக்கே - எனக்கு மாத்திரம்
வெய்து ஆகும் - தீக்ஷ்ணமாயிரா நின்றது,
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொல் - நிலாவின் ஸ்வபாவமாகிய குளிர்த்தி தவிர்ந்து இப்படி வெப்பமாம்படி எம்பெருமான்றான் ஏதாவது செய்துவிட்டானோ.

விளக்க உரை

அன்னமாய் மானாய். என்றவிடங்களிலும் உபமேயங்களான நடை நோக்கு முதலியன மறைக்கப்பட்டன. மயில் கூந்தற்செறிவுக்கும் சாயலுக்கும் உவமையாம். பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் மூங்கிலைத் தோள்களுக்கு உபமானமாக்குவது. செப்பு பொற்கலசம். தொண்டை – கோவைக்கனி. அன்ன திருவுருவம் நின்றதறியாதே – “ப்ரஹ்மசாரி நாராயணன் மாத்திரமே யுள்ளான், கண்டு வந்தவிடுவோம் என்று கருதிச் சென்றேன். பக்கத்தில் ஒரு பிராட்டி யெழுந்தருளியிருப்பது தெரியாமற் போயிற்று. தெரிந்திருந்தால் உட்புகுந்தே யிருக்கமாட்டேன், அந்தோ! தெரியாமற்சென்று பட்டபாடு இது! என்கிறாள்போலும். நெஞ்சு போயிற்று, அறிவு போயிற்று, வளை கழன்றொழிந்தது, மேகலை நெகிழ்ந்தொழிந்தது. இபப்டிப்பட்ட பரிதாப நிலைமையில் கடல்தானும் தனது கோஷத்தைச் செய்து கொலை செய்யா நின்றது. (தன்னுடைய தன்மை தவிரத்தா னென்கொலோ?) “சீதோபவ ஹநூமதா“ என்ன நெருப்புக் குளிருமாபோலே “நிலாச்சுடுக“ என்று நினைப்பிட்டதோ? இதுக்குக் காரணம் என்? என்கிறாள்“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தி காண்க. சந்திரனுக்குத் தன்னுடைய தன்மையாகிய குளிர்த்தி மாறி வெப்பமுண்டாவதற்கு என்ன காரணம்?

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்