விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இன்னிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்.*
  தன்னுடைய தன்மை தவிரத்தான் என்கொலோ?*
  தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,*
  மன்னி இவ்வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்,*
  இன்னிளம் பூந்தென்றலும் வீசும் எரியெனக்கே,* 
  முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,*
  பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,*
  என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர்வாளாம் என்செய்கேன்*
  கல்நவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,*
  கொல்நவிலும் பூங்கணைகள் கோத்து பொதவணைந்து,* 
  தன்னுடைய தோள்கழிய வாங்கி,*  -தமியேன்மேல்-

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தென்னன் பொதியில் - தென் திசைக்கு தலைவனான பாண்டிய ராஜனது மலையமலையிலுள்ள
செமு சந்திரன் தா துஅளைந்து - அழகிய சந்தந மரத்தின் பூந்தாதுகளை அளைந்து கொண்டு
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் - நித்யமான இந்த லோகத்திலுள்ளவர்கள் மனம் மகிழும்படி வந்து உலவுகின்ற
இன் இள பூ தென்றலும் - போக்யமாய் அழகான இளந்தென்றற் காற்றும்
எனக்கே எரி வீசும் - எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது

விளக்க உரை

எனக்கு ஹிம்ஸையை உண்டு பண்ணுவன கடலோசையும் நிலாவுமேயல்ல, தென்றல் முதலிய மற்றும் பல பொருள்களும் ஹிம்ஸிக்கின்றன என்கிறாள். தெற்குத்திசைக்குத் தலைவனாய் மலயத் வஜனென்று பெயருடையவனான பாண்டியராஜனது பொதிய மலையிலுள்ள திவ்யமான சந்தனமரத்தற் பூத்தாதுகளிற் படிந்து அவற்றின் பரிமளத்தைக் கொய்து கொண்டு நாடெங்கும் வந்து வீசி அனைவரையும் மகிழ்விக்கின்ற தென்றற் காற்று எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது, இந்நிலைமையிலே அன்றிற் பேடையின் இன்குரலும் செவிப்பட்டுப் பரமஹிம்ஸையாகின்றது என்கிறாள். (என் செய்கேன்) –கீழே “தென்ன்ன் பொதியில் செழுஞ் சந்தனக்குழம்பின் அன்னதோர் தன்மை யறியாதார்“ என்று தொடங்கி“ இன்னிளவாடை தடவத் தாங் கண்துயிலும் பொன்ன்னையார் பின்னும் திருவுறுக.“ என்று சொல்லியுள்ளபடி – விரஹ காலத்தில் ஹிம்ஸகங்களான இந்த வஸ்துக்களை லக்ஷியம் பண்ணாமல் இவற்றைப் பரமபோக்யமாகக் கொள்ளுகிற சில பெண்களாகப் பிறவா தொழிந்தேனே! இவற்றுக்கு நலிவுபடும் பெண்ணாக பிறந்தேனே! என்செய்வேன் என்கிறாள்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்