விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்,*
  இன்னிள வாடை தடவதாம் கண்துயிலும்,*

  பொன்னனையார் பின்னும் திருவுறுக*  -போர்வேந்தன்-

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தம் பூ அணைமேல் - தங்களுடைய புஷ்பசயனத்தின் மீது
சின்னம் மலர் குழலும் - துகள்களையுடைய புஷ்பங்களையணிந்த கூந்தலையும்
அல்குலும் - நிதம்பத்தையும்
மெல் முலையும்- மெல்லிய முலையையும்
இன் இள வாடை தடவ - இனிதாய் இளையதாயுள்ள வாடைக் காற்றானது வந்து தடவ

விளக்க உரை

பல மாதர்கள் நாயகனைப் பிரிந்த காலத்தும் சிறிதும் வாடாமல் வருந்தாமல் புஷ்பங்களினால் படுக்கை அமைத்துக்கொண்டு அதன்மேலே ஸுகமாகப் படுத்துக்கொண்டு தமது கூந்தலையும் அல்குலையும் மூலையையும் வாடைகாற்று வந்துவீசி இனிமைப்படுத்த இனியராய்க் கிடப்பார்கள், அவர்கள் நெருப்பிலே கிடந்து நிறம்பெறுவர்கள், காட்டுத்தீ கதுவினாலும் லக்ஷியம் பண்ணாமல் உறங்க வல்லவர்கள், அவர்கள் (பின்னும திரு உறுக) நாயகனைப் பிரிந்து நிறமழியவேண்டியிருக்க, விரஹமே விளைநீராக மேன்மேலும் அழகுஞ் செல்வமும் அதிகமாகப் பெறுவார்களாகில் அப்படியே பெற்றிடுக, அப்படிப்பட்ட கல் நெஞ்சு எனக்கில்லை, தலைவனை ஒரு நொடிப்பொழுது பிரிந்தாலும் “மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலா“ என்று கதறிக்கொண்டு நாண் மடமச்சங்களை விட்டு நெடுந்தெருவே புறப்பட்டு நான் மடலூர் வனேயன்றி ‘ஒழிந்த பாவி அப்படியே ஒழியானா‘ என்று சிந்தித்துக்கொண்டு ஸுகமாக வாழ்பவர்களைப் போலே வாழமாட்டேன் என்றதாயிற்று. சின்னமலர்க்குழலும் – சின்ன மலர் – விரிந்த புஷ்பங்களையுடைய என்றுமாம். “சின்னம் –விரிகை“ என்று வியாக்கியானம். பொன்ன்னையார் –பொன் போன்ற மேனியையுடையவர்கள் மாதர்கள், பொன்னானது நெருப்பிலே இடப்பட்டு உருவழியாம அழுக்கற்று நிறமும் ஒளி பெறுமாபோலே விரஹாகநியில் வீழ்ந்தகாலத்தும் உருவழியாமல் மேன்மேலும் ஒளிபெற்று விளங்கும் பாக்கியவதிகள் என்பார் பொன்னையார் என்றார். திருஉறுக – உறுதலாவது அதிகப்படுதல், அதிகமான சோபையை அடைந்திடட்டும் என்றபடி. இது க்ஷேபித்துச் சொல்லும் வார்த்தை.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்