விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய,*

    பொன்னொடு வீதி புகாதார்,*  -தம் பூவ‌ணைமேல்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தூநிலா நீள் நெருப்பில் - நிர்மலமான நிலாவகிற பெரு நெருப்பில்
தம் உடலம் வேவதளராதார் - தங்களுடைய சரீரம் வெந்து போம்படி ரிதிலராகாதவர்கள், (இப்படிப்பட்ட அரஸிகர்கள் யாரென்னில்)
காமவேள் சிலை வாய் மன்னும் மலர் வாளி கோத்து எய்ய பொன் நெடுவீதி புகாதார் - மன்மதன் தனது வில்லிலே பொருந்திய புஷ்ப்பாணங்களைத் தொடுத்துப் பிரயோகிக்கச் செய்தே (இனி மடலூர்வதே புருஷார்த்தமென்று கொண்டு) அழகிய பெரிய வீதிகளிலே புறப்படாதவர்கள் எவரோ, அவர்கள்.

விளக்க உரை

முதலிலே, வேண்டாதார் என்றாரே, அதற்குப்பொருள் விவரிக்கிறார் – காமவேள் வீதி புகாதார் என்பதனால் மன்மதன் தனது வில்லிலே புஷ்ப பாணங்களைத் தொடுத்துப் பிரயோகித்த வளவிலும் “நவ யௌவந்ந ஸ்த்ரீகளாயிருந்து வைத்து நாணங்காக்க வேணுமேயன்றி லஜ்ஜையை விட்டுத் தெருவிலே புறப்படலாமோ“ என்று தத்துவம் பேசியிருப்பவர்கள் – சந்தனக் குழம்பின் தன்மை யறியாதார், ஆயன்வேய் இன்னிசை யோசைக்கிரங்காதார், விடையின் மணிபுலம்ப வாடாதார், அன்றில் பெடை வாய்ச்சிறுகுரலுக்கு உருகி நையாதார், மதியுகுத்த தூநிலா நீணெருப்பில தளராதார், -இப்படிப்பட்ட அரஸிக சிகாமணிகளாவர் – என்றதாயிற்று.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்