விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீரார் திருத்துழாய் மாலை நமக்கு அருளி* 
    தாரான் தரும்என்று இரண்டத்தில் ஒன்றுஅதனை* 
    ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்* 
    ஆராயுமேலும் பணிகேட்டு அதுஅன்றுஎனிலும்*
    போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு* 
    காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்*
    வாராதே என்னை மறந்ததுதான்*--வல்வினையேன்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மட நெஞ்சே - -“அறிவு கெட்டுக் கிடக்கிற மனமே“!
வாராய் - (தூது போக) எழுந்திரு
வந்து - அவ்வெம்பெருமான் பக்கலிலே சென்று
மணிவண்ணன் - நீலமணிபோன்ற வடிவையுடையனான அவ்வெம்பெருமான்
நமக்கு அருளி - நம்மேல் க்ருபைபண்ணி
சீர் ஆர் திரு துழாய் மாலை - சிறந்த திருத்துழாய் மாலையை

விளக்க உரை

பரகாலநாயகி தனது நெஞ்சைத் தூதுவிட்டுப் பட்ட பரிபவத்தைப் பேசுகின்றாள். – “அறிவு மாண்டுகிடக்கிற நெஞ்சே! எழுந்திரு, தன்னைப் பிரிந்தார் மடலெடுக்க வேண்டும்படியான வடிவு படைத்த அவன் பக்கல் சென்று “திருத்துழாய் ப்ரஸாதம் நமக்குக் கொடுக்க முடியுமா? முடியாதா? இரண்டத்தொன்று சொல்லிவிடு“ என்று ஏகாந்தமாகக்கேள், அதற்கு அப்பெருமான் ஆதரவு தோற்ற விசாரித்து நல்ல மறுமாற்றம் சொன்னாலும் சரி, ‘அவளாரோ எனக்குத் தெரியாது“ என்று அநாதரமாகச் சொல்லிவிட்டாலும் சரி, ஏதோவொரு கருத்தைத் தெரிந்துகொண்டு அங்கு விளம்பித்து நிற்காதே கடுக என்பால் மீண்டுவர“ என்று சொல்லி எனது நெஞ்சை அவனிடத்துப் போகவிட்டேன், சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்த்தென்று மகிழ்ந்து அந்தப் படுபாவி நெஞ்சு சடக்கெனப் புறப்பட்டுப் போயிற்று. அதுதான் கடல்வண்ணன் பின்னே போயிற்றாகையாலே ‘கடல் புக்கது திரும்பாது‘ என்றபடி என்னை மறந்து அங்கேதானே படுகாடு கிடகின்றது! என வருந்துகின்றாள் என் நெஞ்சமே எனக்குத் துணையாகப் பெறாத யான் வேறுயாரை வெறுப்பேனென்றதாம். நெஞ்சை லௌகிக பதார்த்தங்களிற் செலுத்தி ஒருவாறு போதுபோக்க வொண்ணாதபடி அவ்வெம்பெருமான்றனே இடைவிடாது சிந்தாவிஷய மாகிறனென்று இதனாற் குறிப்பிட்டபடி ஒரு கவியின் சமத்காரத்தை இங்கே நினைக்க. பிள்ளைப்பெருமாளையங்கார் திருவரங்கக் கலம்பகத்தில் “நீரிருக்க மடமங்கைமீர்! கிளிகள் தாமிருக்க மதுகரமெலாம் நிறைந்திருக்க மடவன்ன முன்ன நிரையாயிருக்க வுரையாமல்யான், ஆரிருக்கிலு மென்னெஞ்ச மல்லதொரு வஞ்சமற்ற துணையில்லையென் றாதரத்தினோடுதூதுவிட்ட பிழையாரிடத்துரைசெய்தாதுவேன். சீரிருக்குமறைமுடிவுதேடரிய திருவரங்கரை வணங்கியே திருத்துழாய்தரில் விரும்பிய கொடுதிரும்பியே வருதலின்றியே, வாரிருக்கு முலைமலர் மடைந்தையுறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி யின்புறமுயங்கி யென்னையுமறந்து தன்னையுமறந்த்தே“ என்ற பாசுரமும் இங்கே அநுஸந்திக்கத்தகும். ஆரானு மொன்னாதார் கேளாமே சொன்னக்கால் – சத்துருக்களுடைய சாதிலே விழாதபடி ரஹஸ்யமாகச் சொல்லவேணுமென்று நெஞ்சோடே சொல்லியனுப்பினளாம். எம்பெருமானுடைய குணபூர்த்தியைப் பொறுக்ககில்லாத சிலர், நம்முடைய காரியத்தை ஆகவொட்டமல் கொடுக்கிற முகத்தாலே எம்பெருமானுடைய தயாவாத்ஸ்ல்யாதி குணங்களை அழித்துவிடக் கூடுமென்று அஞ்சுகின்றாள் போலும். ஒன்னாதார் – ஒன்றாதார், (தம்மோடுமனம்) பொருந்தாதவர், எனவே பகைவராவர்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்