விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த*  கங்குல் குறும்பர்*
    மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்,*  அன்ன கண்டும்- 
     
    காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து* 
    மாலை நல் நாவில் கொள்ளார்,*  நினையார் அவன் மைப் படியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காலை - உதய காலத்தில்
வெய்யோற்கு முன் - ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த - நிற்கமாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர் - இருளாகிய சிற்றரசர்கள்
மாலை - ஸாயங்காலத்திலே

விளக்க உரை

உலகத்தில் அனேகர் “வைகலும் வகைல் வரக்கண்டு மஃதுணரார்” (நாலடியார்- அறன்வலியுறுத்தல் 9) என்றபடி காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் மாறிமாறி வந்துகொண்டு காலங்கழிந்துகொண்டே செல்லுகிறபடியை ப்ரத்யக்ஷமாகவே பார்த்துக்கொண்டிருக்கச் செய்தேயும் தங்களுடைய இளமைப் பிராயம் விரைவாகக் கழிந்து போவதில் கருத்தூன்றுதலின்றி எம்பெருமான் பக்கல் ஈடுபாடு கொள்ளாமல் வீணேயிழந்து பழுதே பலபகலும் போக்குகிறார்களேயென்று ஆழ்வார் வெறுத்து அருளிச் செய்கிறார். உலகர்கள் தினப்படி ஸூர்யன் உதிக்கும்போது வேண்டியபடி பொருள்களைத் திரட்டலராமென்று களிக்கிறார்கள்; பிள்ளை ஸூர்யன் அஸ்தமிக்கும்போது வேண்டிபடி விஷய போகங்களைச் செய்யலாமென்று குதூஹலிக்கிறார்கள்; இப்படி ஸூர்யனுடைய உயத்தேடு அஸ்தமனத்தோடு வரசிய ஸம்ஸாரிகள் களிப்பதே கருமமாயிருக்கிறார்களே யன்றி, ‘இங்ஙனம் வாள்களாகி நாள்கள் செல்லுகினற்னவே, பழுதே பலபலகும் போகின்றனவே! ஊமனார் கண்ட கனவிலும் பழுதா யொழிகின்றனவே நாள்கள்’ என்று கவலைப்படுவாருமில்லையே! ஒரு கணப்பொழுதையும் பகவதநுஸந்தாகத்திற் செலுத்துவாரில்லையே! என்று ஸம்ஸாரிகளுக்காக ஆழ்வார் தாம் கவலைப்படுகிறார்.

English Translation

The wicked ones of darkness that flee in the morning before the Sun rises return in the evening when the sun sets, and crows the Earth everyday. Even seeing this, no one turns his thoughts to the dark-hued lord, no one bathes in the wisdom-tank every morning, no one wakes up inwardly and offers praise to the lord Tirumal Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்