விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தீவினைக்கு ஆரு நஞ்சை*  நல் வினைக்கு இன் அமுதத்தினை,* 
  பூவினை மேவிய தேவி மணாளனைm,*  புன்மை எள்காது-
  ஆவினை மேய்க்கும் வல் ஆயனை*  அன்று உலகு ஈர் அடியால்-
  தாவின ஏற்றை எம்மானை*  எஞ்ஞான்று தலைப்பெய்வனே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முன்பொரு காலத்திலே
உலகு - உலகங்களை
இர் அடியால - இரண்டு அடியாலே
தாவின ஏற்றை - அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை - எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன் - எப்பொழுதும் சேர்வேன்?
 

விளக்க உரை

நாயகனுடைய ஸம்ச்லேஷத்துக்கு விரைகின்ற நாயகி இரங்கியுரைக்கும் பாசுரம் இது. கொடிய துன்பத்தை விளைக்கின்ற தீக்கருமங்களை எளிதில் ஒழிப்பவனும், தன் பக்கல் அடிமை செய்வார்க்கு நிகரற்ற இன்பமூர்த்தியாயிருப்பவனும், தாமரையைத் தனது சிறப்புக்கும் ஸௌகுமார்யத்துக்கும் அழகுக்கும் தக்க இடமாகக் கருதி அதில் வீற்றிருப்பவளாய்ப் புருஷகாரபூதையான பிராட்டிக்கு நாயகனும், திருவுள்ளத்தில் சிறிதும் வெறுப்பின்றியே உகப்புடனே பசுக்களை மேய்க்கப்பிறந்து, வேஷம் கொண்டவன் போலன்றிச் சாதி குணந்த தொழிகளில் உறைந்து நிலைநின்ற இடையனும் இரண்டடிகளாலே ஸகல லோகங்களையும் அளந்து கொண்ட மேம்பாடுடையனுமான எமது தலைவனை எப்பொழுது சேரப்பெறுவேன் என்கிறாள். அடியார்கட்குப் பகை தீர்ப்பவனும் அடிமைக்கு இனியனும் புருஷகாரமான திருமகளுக்குக் கணவனும் அனபர்க்கு எளியனும் எல்லாவுலகையும் கீழ்ப்படுத்தியவனுமான எம்பெருமானை எப்பொழுது சேர்ந்து அநுபவிக்கப் பெறுவேனென்று ஆழ்வார் பேற்றுக்கு விரைந்து பேசுகிறபடி. ‘தீவினைக்கு அரு நஞ்சு’ என்றது- கொடிய துன்பத்தை விளைக்கிற தீய கருமங்களை எம்பெருமான் எளிதில் ஒழிப்பவன் என்றவாறு. ‘நல்வினைக்கு இன்ன முதம்’ என்றது- தன் விஷயத்தில் கைங்கரியம் செய்பவர்கட்கு இன்பமயமாயிருப்பவன் எம்பெருமான் என்றவாறு; அவர்கள் பக்தியை அழியாது வளரச் செய்பவன் என்க. முக்திக்க வ்யாஜகாரணமான ப்ரபத்தியை இங்க நல்வினை என்றது.

English Translation

The Lord is the antidote for the venom of evil karmas and manna for good deeds. He is the bridegroom of the goddess on the lotus, Without belitting himself, he grazed cows and protected them. Then in the yore he strode the Earth in two steps. Alas, when will we attain him?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்