- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உருவெளிப்பாடுகண்ட நாயகி நாயகனது கண்ணழகுக்கு இரங்கியுரைக்கும் பாசுரம் இது. உருவெளிப்பாடாவது- பிரிந்து சென்ற நாயகனிடத்தில் இடைவிடாது கருத்தை ஊன்றவைத்த மனத்தின் நினைப்பு மிகுதியால் அவனது வடிவம் வெளிப்பாடாய்க் கண்ணுக்கெதிரே காணப்படுதல். அங்ஙனம் காணப்பட, அவ்வடிவத்தின் கண்ணழகிலேயீடுபட்ட நாயகி, அவ்வடிவம் கைக்கு எட்டாது மறைந்த பின்பு, அக்கண்ணழகு தன் காதல்நோயை மிக வளர்த்தித் தன்னை மிக வருத்துகின்றமையைத் தோழியரை நோக்கிச் சொன்னது இது. வெவ்விய இரண்டு ஸூர்ய மண்டலங்கள் உதயகிரியில் ஏக காலத்தில் தோன்றி விளங்குகின்ற தன்மை போன்ற தன்மையையுடையனவான எம்பெருமானது திருக்கண்களானவை எமக்குத் தாபஹேதுவாயிரா நின்றன. அந்த ஸூர்ய வடிவங்களிலே ஜ்வலித்துக்கொண்டு தோன்றுகிற சிவந்த நெருப்பிலே வேறு கதியற்று விழுந்து சாகின்ற மந்தேஹரென்னும் அசுரர்களுக்கு அவை எப்படி தாபகரங்களாயிருகின்றனவோ அப்படியே அநுகூலரான எம்போன்றவர்களுக்கும் தாபஞ் செய்வனவாய்ப் பரவுகின்றன; எம்பெருமான் உலக முழுவதையும் விரும்பிக் காத்தருள்கிறானென்று புகழ்பெற்றிருக்குந் தன்மைக்கு இதுவோ ஏற்றது! என்றாளாயிற்று.
English Translation
Like two radiant Suns risen at once over the Udayagirl hill, the Lord's eyes have begun to shine again, with a fire in them that burns me along with the Asuras that fall into if. Tell me, O Sakhis! Is this what the good world desires?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்