விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து,*  வெல்வான்-
    ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை,*  புவனி எல்லாம்-
    ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே?*
    வார் ஏற்று இளமுலையாய்,*  வருந்தேல் உன் வளைத்திறமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார் - கருத்த
இருள் - இருளாகிய
ஏறு - எருதானது
செகில் - சிவந்த
சுடர் - ஸூர்யனாகிய

விளக்க உரை

மாலைப்பொழுது கண்டு மயங்கிய தலைவியைத்தோழி ஆற்றும் பாசுரம் இது. பிரிந்துபோனவர் வந்து சேர்வதற்கு உரியதும் போகத்துக்கு உரிய காலமான இரவின் தொடக்கமுமாகிய மாலைப்பொழுதுவரக் கண்டு இன்னமும் நாயகன் வந்திலனேயென்று நாயிக நோவுபட, அது கண்ட தோழி ‘இது நீ நினைக்கிற ஸந்தியா காலம் வந்ததன்று; இருளாகிய கறுத்த எருதுக்கும் ஸூர்யனாகிய சிவந்த எருதுக்கும் யுத்தம் நிகழ்கிறபடி காண்; நீ நினைக்கிறபடி உண்மையான மாலைப்பொழுதாயின், உலக முழுவதையும் பாதுகாக்கவல்ல அருளையுடைய தலைவன் உனக்கு அருள்செய்ய வாரா தொழிவனோ? அவன் வாராமையாலும் இதனை மெய்யான மாலைப்பொழுதன்றென்று நீ தெளிந்து கொள்ளலாம்; உன் கைவளைகள் கழன்றுபோவதைக் குறித்து நீ வருத்தப்படவேண்டா; அவை கழலவொண்ணாதபடி அவன் விரைவில் வந்தருளுவன்’ என்று கூறி ஆற்றுவிக்கிறாள்.

English Translation

O Coiffure-breasted tender one! Do not worry about your bangles. The black bull called darkness, who fell to the radiance of the red bull called sun, now limps back to fight again; it is only early evening. The lord accepted gift-sanctifying-water and took the whole earth. Will he not grace you as well?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்