விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மலர்ந்தே ஒழிந்தில*  மாலையும் மாலைப் பொன் வாசிகையும்*
  தோய் தழைப் பந்தர் தண்டு உற நாற்றி,*  பொரு கடல் சூழ்-
  தாவிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்!*
  கலந்தார் வரவு எதிர் கொண்டு,*  வன் கொன்றைகள் கார்த்தனவே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பொரு கடல் சூழ் - அலைமோதுகிற கடலால் சூழப்பட்ட
நிலம் - பூலோகத்தை
தாவிய - அளந்தருளின
எம்பெருமான் தனது - எம்பெருமானுடைய
வைகுந்தம் - ஸ்ரீவைகுண்டத்தை

விளக்க உரை

இப்பாட்டுக்குத் துறைகாலமயக்கு: காலம் இளையது என்றல். நாயகனே நாயகியை விட்டு நீங்கும்போது கார்காலத்திலே மீண்டு வருவேனென்று காலங் குறித்துச் சென்றானாய் அக்காலம் வந்தவளவிலும் தான் வாராதிருக்க, கொன்றை மரங்கள் பூக்கத் தொடங்கியதை நோக்கிக் “கார்காலம் வந்துவிட்டதே, இன்னமும் நாயகன் வரவில்லையே’ என்ற நாயகி கலங்காநிற்க, அது கண்ட தோழி ‘நங்காய்! கார்காலம் வந்ததன்றுகாண்; பிரிந்துசென்ற நாயகருடைய வருகையை முற்பட எதிர்நோக்கிக் கொண்டு நமது மகிழ்ச்சியால் கொன்றைகள் தாமாக அரும்பிநின்றன; அதுவேயன்றிக் காலம் வந்து நன்கு மலர்ந்தனவில்லை’ என்று காலத்தை மயக்கிக்கூறி அவளை ஆற்றுவிக்கிறாள்: “காரெனக் கலங்கும் ஏரெழிற் கண்ணிக்கு, இன்துணைத் தோழி அன்றென்று மறுத்தது” எனத் துறையிலக்கணங் காண்க:

English Translation

O Friend of excellence like the Vaikunta of the lord who strode the ocean-girdled Earth! The konrail trees have sprouted buds, expecting your paramour's return. But they have not yet flowered into strings of fresh blooms over a canopy of leaves and branches!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்