விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று,*  ஒரு கழல் போய்-
  நிழல் தர*  எல்லா விசும்பும் நிறைந்தது,*  நீண்ட அண்டத்து-
  உழறு அலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா*
  அழறு அலர் தாமரைக் கண்ணன்,*  என்னோ இங்கு அளக்கின்றதே? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்றே - ஒரு திருவடியிடமே
ஆயிற்று - பூமி முழுவதும் தானாய்ப் பரந்தது; மற்றொரு திருவடி
முழுதாயிற்று - (பூமியிலே இடமில்லாமையாலே மேலே) போய்
உழறு அலர் - உலகுங்செல்லவல்ல பரந்த
ஞானத்து சுடர் ஆய் விளக்காய் - ஞானமாகிய ஒளிக்கு இடமான விளக்குப் போன்றவனாய்

விளக்க உரை

இப்பாட்டில் த்ரிவிக்ரமாவதார வரலாற்றைப் பற்றின விஷயம் ப்ரஸ்தாபிக்கப்பட்டுள்ளதானது எம்பெருமானுடைய ஸர்வ சக்தித்வத்தைக் கூறியவாறு. ‘நாயகன் என்னோடு ஸம்ச்லேஷிக்க வரக்காணவில்லையே; என்ன பிரதிபந்தக முள்ளதோ அறியேன்; பிரதிபந்தங்களைக் பரிஹரித்துக் கொண்டுவந்து சேர்தற்குரிய ஆற்றல் அவர்க்கு இல்லைபோலும்! என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த தலைவியை நோக்கித் தோழியானவன் ‘நங்காய்! இப்படியோ நீ நினைக்கிறாய்? உன்னுடைய நாயகனான ஈச்வரனுக்குச் செய்யவரிய தொழிலுமொன்றுண்டோ? எல்லா வல்லவனன்றோ அவன்’ என்று அவனுடைய வல்லமைகளுள் சிறந்ததான ஒன்றை யெடுத்துரைக்கும் முகத்தால் ‘இபபடி ஸர்வசக்தியுக்தனான நாயகன் நம்மோடு கலப்பதற்கு இடையூறாகவுள்ளவற்றைப் பரிஹரித்து விரைவில் வந்திடுவதென்று நீ ஆறியிருகுக வேணுமே யொழிய வல்லவனல்லனென்று கருதிக் கலங்குவது தகுதியன்றென்று ஆற்றுகிறாளாயிற்று. ஆகவே, தோழி தலைவன் பெருமையை யுரைத்துத் தலைவியை ஆற்றல் இது.

English Translation

His one sole covered the Earth. His one foot raised into the sky shadowed the worlds below and filled the space. A light of knowledge-bliss spread everywhere in the Universe. The beautiful-as-the-swamp-lotus Krishna is one without a superior, wonder what he has in store for us here!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்