விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வார் ஆயின முலையாள் இவள்*  வானோர் தலைமகன் ஆம்,*
  சீர் ஆயின தெய்வ நல் நோய் இது,*  தெய்வத் தண் அம் துழாய்த்-
  தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும்*  கீழ்-
  வேர் ஆயினும்,*  நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாரா ஆயின முலையான  - கச்சுப்பொருந்திய தனத்தையுடையவளான
இவள்                                           - இப்பராங்குச நாயகியினுடைய
இது                                               - இந்த நோயானது
தண்                                              - குளிர்ந்த
அம்                                               - அழகிய

விளக்க உரை

இப்பாட்டுக்குத் துறை- வெறிவிலக்கு; கீழ் “சின்மொழி கோயோ” என்ற இருபதாம் பாட்டிற்போல பராங்குச நாயகியின் மோஹத்துக்கு நிதான மறியாதே க்ஷுத்ர தேவதையின் ஆவேசத்தாலே வந்ததாகக் கருதி உற்றாருறவினர் கலங்கி வழியல்லாவழியே பிழிந்து பரிஹாரங்கள் செய்யப்பார்க்க, இவளது பிரகிருதியை அறிந்திருப்பானொரு மூதறிவாட்டி ‘நீங்கள் செய்கிற விது தகுதியன்று; இவளுடைய இந்நோய் தேவதாந்தரத்தின் ஆவேசத்தால் வந்ததன்று; தேவாதி தேவனான எம்பெருமானிடத்து ஈடுபட்டதனாலுண்டான சிறந்த நல்ல நோய் இது; இவள் பிழைக்கவேணுமாகில் நான் சொல்லுகிறபடியே பரிஹாரஞ் செய்யப்பாருங்கோள்; திவ்யமானதிருத்துழாய் மாலையையினும் அத்துழாயின் ஓரிலையையானினும் அதன் கிளையையாயினு அதன் வேரையாயினும் அதற்கு இருப்பிடமாய் நின்ற மண்ணையாயினும் கொண்டு வீசுங்கோள்; அதன் காற்று இவள்மேல் பட்ட மாத்திரத்திலே இவள் பிழைத்திடுவள்’ என்கிறாள் என்க. இனி, இதனைக் கட்டுவிச்சி(குறிசொல்லும் குறத்தி) கூறல் என்பதுமுண்டு; “தலைவியாற்றாமையால் வந்த நோவுக்குப் பரிஹாரம் ஏதோவென்று வினவின செவிலி முதலானார்க்குக் கட்டுவிச்சி நோய் நாடி பரிஹாரஞ் சொன்ன பாசுரம்” என்பர் அழகிய மணவாள சீயர். களவொழுக்கத்தால் நாயகனோடே கலந்து பிரிந்து ஆற்றாது மெலிந்து வருந்திய நாயகியைக் கண்ட செவிலித் தாய் இவள் நோய்க்குக் காரணம் இன்னதென்று அறியாமல், நிமித்தங்கண்டு கூறவல்ல கட்டுவச்சியையழைத்து வினவுவதாக இருக்கையில்.

English Translation

This full breasted girl has contracted a divine sickness by the auspicious qualities of the lord of gods. Make he smell the cool tulasi-garland worn by the lord; or a leaf of it, or a stem, Or even the earth it grew on will do.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்