- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நாயகன் நாயகியினிருப்பிடம் நோக்கி மீண்டு வருகையில் தேர்ப்பாகனோடு கூறுதல் இது. பொருளீட்டிவரப் பிரிந்துசென்ற நாயகன் காரியந் தலைக்கட்டித் தேரில் திரும்பி வருகின்றான்; வரும்போது தான் காலங்கடந்து வருகின்றமை கருதி நாயகி மிகவும் துயரப்படுவளென்றெண்ணித் தேர்ப்பாகனை நோக்கி விரைந்து தேரை நடத்துமாறு கட்டளையிடுதல் இது. தன்னைப் பிரிந்து நந்திக்ராமத்தில் துடித்துக்கொண்டிருக்கின்ற பரதாழ்வானுடைய ஆற்றாமையைக் கருதி ஸ்ரீராமபிரான் பதினான்கு வருஷகாலம் சென்ற வழியைச் சிறிது காலத்தில் கடந்து மீண்டு வந்தாற்போல, நெடுஞ்காலம் பிரிந்த நாயகன் தான் மீண்டும் வரக்கடவதாக முன்பு சொல்லிப்போன காலம் வந்திட்டவளவிலே இவளாற்றாமையைக் கருதி நெடுநாட்போன வழியைச் சிறிதுபொழுதில் கடந்து மீண்டுவர நினைத்துப் பாகனை நோக்கி ‘விரையத்தேரை நடத்து’ என்கிறான்.
English Translation
O Deft one, drive our chariot speedily before the girl's bright forehead pales, before her colour fades. We have to reach the great bee-humming hill of venkatam where streams drop to Earth like strings of pearls from the crown to feet of the lord.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்