விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிறம் உயர் கோலமும்*  பேரும் உருவும் இவைஇவை என்று,*
    அறம் முயல் ஞானச் சமயிகள் பேசிலும்,*  அங்கு அங்கு எல்லாம்-
    உற உயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும்*
    பெற முயன்றார் இல்லையால்,*  எம்பிரான பெருமையையே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நிறம் - திருமேனி நிறமும்
உயர் கோலமும் - சிறந்த அலங்காரமும்
பேரும் - திருநாமமும்
உருவும் - வடிவமும்

விளக்க உரை

நாயகி நாயகனுடைய பெருமையையுரைக்கும் பாசுரமிது. “வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக்கண்டார், ஊழ்கொண்ட சமயத் தன்னாலுருவுகண்டாரை யொத்தார்” (கம்பர்) என்றாற்போல எம்பெருமானுடைய நாமம் ரூபம் குணம் முதலியவற்றில் அந்தந்த மதஸ்தர்கள் தாம் தாம் ஒவ்வொரு பகுதியை அறிந்தாரேயன்றி முற்றும் எவரும் அறிந்திலர் என்கிறாள். கீழ்ப்பாட்டில் ‘எம்பிரானதெழில் நிறம் யவர்க்கு மெண்ணுமிடத்ததுவோ’ என்றதன்மேல், ‘எம்பெருமானுடைய நிறத்தையும் கோலத்தையும் பெயரையும் உருவையும் இவையிவையென்று ஞானச் சமயிகள் பேசுகின்றனான்றோ? அப்படியிருக்க ‘எண்ணுமிடத்ததுவோ?’ என்று எங்ஙனே சொல்லலாம்? என்று எழுந்த ஆக்ஷேபத்திற்கு விடை கூறுவது போலும் இப்பாட்டு; அவர்களும் அவன் பெருமையைச் சிறிது சிறிது கண்டதேயன்றி முடியக் காணப்பெற்றாரில்லை எனப்பட்டது.

English Translation

Even the learned votaries of religious texts that speak of the lord's hue, his jewels, his names and his forms as this and this, only catch glimpses of that supreme knowledge which stands as a radiant beacon, but can never attain even a little of that glory-flood, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்