விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கடம் ஆயினகள் கழித்து,*  தன் கால் வன்மையால் பல நாள்*
  தடம் ஆயின புக்கு*  நீர் நிலைநின்ற தவம் இதுகொல்,* 
  குடம் ஆடி இம் மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து* 
  நடமாடிய பெருமான்,*  உரு ஒத்தன நீலங்களே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கடன் ஆயினகள் கழித்து - காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து
கடம் ஆயின புக்கு - தடாகங்களாகவுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு)
தம் கால் வன்மையால் - தமது கால்களின் வலிமையால்
பல நாள் - அனேக காலம்
நீர் நிலைநின்ற - நீரிலே நீங்காது நின்று செய்த

விளக்க உரை

நாயகனைப் பிரிந்த நாயகி போலிகண்டு மகிழ்ந்து உரைக்கும் பாசுரம். ஸர்வேச்வரனாகிய தலைமகன் பிரியம் பெற்று அப்பிரிவை ஆற்றாது இரங்குகிற பாரங்குசநாயகிதான் இரங்குமிடமாகிய நெய்தல் நிலத்திலேயுள்ள கருநெய்தல் மலர்களை நோக்கி அவை தலைமகனான திருமாலினது திருமேனிநிறத்தை ஒத்திருக்கக்கண்டு, இவற்றைக் கண்டு கொண்டாகிலும் ஒருவாறு தரித்திருக்கலாமென்று கருதி, அவை அவன் திருமேனி நிறத்தையொத்திருப்பதாகிய ஸாரூப்யநிலையைப் பெற்றமை பற்றி வியந்து ‘இவை நெடுநாள் நீர் நிலையிலே நின்று இடைவிடாது செய்த தவத்தின் பலனாகவன்றோ இது பெற்றது’ என்று கூறுகின்றான். போலிகண்டு மகிழ்தல் தவிர ‘போலிகண்டு மகிழ்தல் தவிர ‘போலிகண்டு அழிதல்’ என்றும் ஒரு துறையுண்டு; அதனையே இப்பாட்டுக்குக் கூறுதலுமாம். போலியைக் கண்டு மகிழ்வதுமுண்டு, வருந்துவது முண்டு;- “பூவையுங் காயாகவும் நீலமும் பூக்கின்ற, காவிமல ரென்றும் காண்டோறும்- பாவியேன், மெல்லாகி மெய்மிகலே பூரிக்கும் அவ்வவை, யெல்லாம் பிரானுருவேயென்று” என்ற பெரிய திருவந்தாகிப் பாசுரத்தில் மகிழ்தலும், “ஒக்குமம்மானுருவமென்று உள்ளங்குழைந்து நாணாளும், தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந்தோறும் தொலைவன் நான்” (6-5-8) என்ற திருவாய்மொழிப் பரசுரத்தில் வருந்துதலுங்காண்க. “பைம்பொழில் வாழ் குயில்கான் மயில்கான் ஒண்கருவிளைகான், வம்பக்களங்களிகாள் வண்ணப்பூவை உறுமலர்காள், ஐம்பெரும்பாதகர்காள் அணிமாலிருஞ்சோல¬ நின்ற, எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கென்செய்வதே!” (9-4) என்ற நாச்சியார் திருமொழியுங் காண்க.

English Translation

O Dark blue water lilies! You have the hue of the pot-dancer-lord who measured the Earth and sky with thunderous feet is this the fruit of your penance? –you have renounced your garden home and remain standing firmly on one leg in the deep waters all the time.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்