விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எம் கோல் வளை முதலா,*  கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்*
  செங்கோல் வளைவு விளைவிக்குமால்,*  திறல் சேர் அமரர்- 
  தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன்*
  நம் கோன் உகக்கும் துழாய்,*  என் செய்யாது இனி நானிலத்தே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திறல் சேர் - வலிமை பொருந்திய
அமரர் தம் - தேவர்களெல்லார்க்கும்
கோனுடைய - தலைவனான பிரம தேவனுக்கும்
தம்கோள் - தலைவனா யிருப்பவனும்
உம்பர் எல்லாயவர்க்கும் தம்கோன் - பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளெல்லோர்க்கும் தலைவனாயிருப்பவனும்

விளக்க உரை

தலைமகனது காரில் ஈடுபட்ட தலைவி ஆற்றாது கூறல் இது. முன்பு ஸம்ச்லேஷித்திருந்த மையத்தில் தலைமகனுடைய தேஹத்தின் ஸ்பர்சத்தினால் இன்பம் தந்த திருத்துழாயானது, விச்லேஷ நிலைமையில் அவ்வின்பத்தை ஞாபகப்படுத்தி ஆற்றாமையை அதிகரிக்கச் செய்து அதனால் உடம்பு மெலிந்து கைவளைகள் கழன்று விழப்பண்ணிற்று; இதனால் பக்ஷபாதமில்லாமல் எல்லாவுயிர்களையும் பாதுகாத்தருள்கின்ற எம்பெருமானது செங்கோண்மைக்கும் ஒரு குறையை உண்டாக்குகின்றது; (அதாவது- என்னைப் பாதுகாவாமையாகிய குறை.) இன்னும் என்ன பாடுபடுத்துமோ? என்று தலைவி இரங்குகின்றாள். இப்பாசுரத்தைத் தாய் வார்த்தையாகக் கொண்டாள். ‘எங்கோல்வளை முதலா என்பதற்கு- அழகிய வளையையுடைய எமது மகள் நிமித்தமாக என்று பொருள் கொள்ளவேணும். அதுவும் ஒக்கும். இனி, தலைவனான கண்ணபிரான்தானே (பிரிந்து போய் மீண்டு வாராது உபேக்ஷிப்பதால்) எம். கோல்வளை காரணமாக உபய விபூதி ரக்ஷகமான தன் செங்கோலுக்கு ஒரு வளைவை உண்டாக்கிக் கொள்ளுகிறான்; இதற்குமேல், அவனது பரிவாரமான திருத்துழாய்தான் என் செய்ய மாட்டாது? என்றும் பொருள் கொள்ளலாம்: அவன் உபேக்ஷித்தமாத்திரத்திலே இது அழிக்குமென்று கருத்து

English Translation

Because of my bangled daughter, this Tulasi, -that the Lord of gods, the lord of celestials, the lord of all, our own lord revels in, -has become a blemish on the just rule of Krishna over the sky and Earth. Alas! Now what more may happen in the four-parted world?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்