விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சூட்டு நல் மாலைகள்*  தூயன ஏந்தி,*  விண்ணோர்கள் நல் நீர்-
    ஆட்டி*  அம் தூபம் தராநிற்கவே அங்கு,*  ஓர் மாயையினால்- 
    ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து இமில் ஏற்று வன் கூன்*
    கோட்டிடை ஆடினை கூத்து*  அடல் ஆயர் தம் கொம்பினுக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அங்கு - பரமபதமாகிற அவ்விபூதியில்,
விண்ணோர்கள் - நித்யஸூரிகள்
நல் நீர் ஆட்டி - நன்றாகத் திருமஞ்சனம் ஸமர்ப்பித்து
அம் தூபம் தரா நிற்க - அழகிய தூபத்தை ஸமர்ப்பித்துக் கொண்டு நிற்க, (அந்தத்  தூபத்தினால் திருமுக மண்டலம் மறைந்திருக்கும் க்ஷணத்திலே)

விளக்க உரை

இப் பிரபந்தத்தில் முதற்பாட்டும் கடைப்பாட்டும் தவிர மற்றைத் தொண்ணூற்றெட்டுப் பாசுரங்களும் அகப்பொருள்துறையிலே அமைந்தனவென்று கெள்ளவேணுமென்பது சிலருடைய கொள்கை. ஆழ்வார் தரமான தன்மையிலே அருளிச் செய்வதாக நிர்வஹிக்கக்கூடிய பாசுரங்களுக்குக் கிளவித்துறை கூறவேண்டியது அவசியமன்று என்பது பூருவாசாரியர்களின் திருவுள்ளம். இப்பாட்டு ஆழ்வார் தரமான தன்மையில் கிருஷ்ணாவதார சேஷ்டிதத்தில் ஈடுபட்டு அருளிச் செய்வதாயிருக்கையாலே துறையொன்றும் கூறாதே நம்பிள்ளை முதலான ஆசிரியர்கள் வியாக்கியானித்தருளினர். அவ்வழியே பற்றி உரைப்போமிங்கு. முன்னிரண்டடிகளில் பரத்வத்தையும் பின்னிரண்டடிகளில் ஸௌலப்யத்தையும் பாராட்டிக் கூறுகின்றார். பரமபதத்திலே நித்தய ஸூரிகள் திருவாராதநம் ஸமர்ப்பிக்க விருக்கும் நிலைமையில் ஸ்நாநாஸநமும் அலங்காராஸநமும் ஸமர்ப்பித்து (அதாவது, திருமஞ்சனம் ஸமர்ப்பிப்பித்துத் திருமாலைசாத்தி)த் தூபம் ஸமர்ப்பிக்குமளவில் அப்புகையினால் திருமுக மண்டலம் மறையுமே, அந்த அவஸரத்தில் வெண்ணெயமுதை நினைத்துத் திருவாய்ப் பாடியிலெழுந்தருளி நப்பின்னைப் பிராட்டிக்காக எருதுகளை யடர்ந்து அவளை மணந்துகொண்டனை; பிரானே! உன் சக்தி விசேஷத்தை என்சொல்ல வல்வோம்! என்று ஈடுபட்டு அருளிச்செய்தாராயிற்று.

English Translation

O Lord in the sky! Even while the celestials there brought fresh garlands, anointed you and offered incense, in a trice by magic did you not come here to stead butter, then dance between the horns of seven bulls for the valiant cowherd-daughter Nappinnai?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்