விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இருள் விரிந்தால் அன்ன*  மா நீர்த் திரைகொண்டு வாழியரோ* 
  இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல்,*  அரவு அணைமேல்-
  இருள் விரி நீலக் கரு நாயிறு சுடர் கால்வது போல்*
  இருள் விரி சோதிப்,*  பெருமான் உறையும் எறி கடலே! 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இருள விரி - இருளை வெளியுமிழ்கிற
நீலம் - நீலரத்தினம் போன்ற
கரு - கருமை நிறமுடைய
ஞாயிறு - ஸூர்யமண்டலமென்று
சுடர்  கால்வது போல் - ஒளி வீசுவது போல,

விளக்க உரை

தலைவி கடலைநோக்கி தேர்வழி தூரல் என்னுந்துறை இது. இத்துறை திருக்கோவையாரில் ‘தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்’ என்று கூறப்பட்டது. “உள்ளுமுருகி உரோமஞ்சிலிர்ப்ப வுடையவனாட், கொள்ளுமவரிலொர் கூட்டந்தந்தான் குளிக்கும் புலியூர், விள்ளும் பரிசு சென்றார் வியன் தேர்வழி தூரல் கண்டாய், புள்ளூர் திரையும் பொரச் சங்க மார்க்கும் பொருகடலே!”(185) என்ற திருக்கோவையாரைக் காண்க. களவுமுறையால் நாயகியைப் புணர்ந்துநின்ற நாயகன் இதனால் ஊரெங்கும் பழி பரவுதலையறிந்து அப்பழி துற்றல் அடங்குமாறு அவளைச் சிலநாள் பிரிந்திருக்கக் கருதி அதனை நாயகிக்குக் கூறாமல் தான் பிரிவதை அவளறிந்தால் வருந்துவளென்று அவளறியாத படியும் ஊரார் அறியாதபடியும் அவள் முகங்காண்கின்றபொது தான் போகமாட்டாமையாலும் இருளிலே பிரிந்து செல்ல, பின்பு அப்பிரிவையறிந்து ஆற்றாது வருந்துகின்ற நாயகி அவனது தேர்ச்சக்கரம் சென்ற அடையாளத்தை நோக்கி அவன் திரும்பி வருமளவும் அதனையே தனது உயிர்ப்பிக்குப் பற்றுக்கோடாகப் பாவித்துப் பார்த்துக்கொண்டிருக்கையில், அங்ஙனம் பிரிந்திருந்து இரங்குமிடம், கடற்கரையாகிய நெய்தல் நிலமாதலாலே அத்தேர்க்கா லடையாளத்தைக் கடலின் அலைவீசி வந்து அழிக்கப்புக, அழித்திடாதே யென்று அதனை வணங்கிவேண்டிக் கொள்வதாமிது.

English Translation

O Dark Ocean, where the lord of dark effulgence, -like a black sun spreading a blue glow of dark rays, -reclines on a serpent bend. May you live! My lord slipped out in the dark of the night. His chariot tracks brought me to your shore. Pray do not wipe out the tracks with your dark-as-pitch waves.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்