விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கயலோ நும கண்கள்? என்று*  களிறு வினவி நிற்றீர்,* 
    அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை,*  கடல் கவர்ந்த-
    புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்*
    பயலோ இலீர்,*  கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

களிறு வினவி - யானை (இங்குவரக கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி
கயலோ நும கண்கள் என்று நிற்றீர்; - ‘உங்கள் கண்கள் கயல்மீன்கள் தாமோ?’ என்று (எங்கள் கண்களைக் கொண்டாடிக்) கால் பேராமல் நின்றீர்;
அயலோர் அறியிலும் - அயலார் அறிந்தாலும்
ஈது என்ன வார்த்தை - இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல் கவர்ந்த - கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும்

விளக்க உரை

புனத்திடைக் களிறு வினவவந்து கண்ணழகைக் கொண்டாடின நாயகனைக் குறித்துத் தோழி கருத்தறிந்து உரைத்த பாசுரமிது. இங்குப் பரம போக்யமான பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் சில அறியாத்தக்கன; -“இயற்கையிலே கலந்து பிரிந்த தலைமகன் இரண்டாங் கூட்டத்துக்காகப் புனத்திலே வந்து கிட்டக்கடவதாகக் குறிவரவிட்டுப் போய்க் கால திக்ரமம் பிறந்து பின்பு அங்கே சென்று கிட்டிவன் இவர்களைக் கண்டு கலங்கி அஸங்கதபாஷணம் பண்ண, அவர்களும் அக்தைக்கொண்டு, இவர் வருவதாகப் போனபடிக்கும் வந்தபடிக்கும் இப்போது ஆற்றாமை தோற்றப் பேசுகிற பேச்சுக்கும் ஒரு சேர்த்தி கண்டிலோமென்று சிரித்துக் கொண்டாடுகிறார்கள். இவன்தான் வீரனாகையாலே என்றும் ஆனை வேட்டைக்குப் போம் பழக்கத்தாலே ஆனை வேட்டையை வினவிக்கொண்டு செல்லக் கடவதாக நினைக்கிறான். பிடியையிழந்ததொரு களிறு தன் ஆற்றாமையாலே அமணானைப்பட்டுத் திரியுமாபோலே இவர்களையிழந்து தான் ஆற்றாமையோடே திரிகிறபடியை அந்யாபதேசத்தாலே ஆவிஷ்சரிக்கிறான்.” என்று.

English Translation

Are these soul-piercing spears, or beautiful fish? Or are these unfired darts of Madana's bow? These eyes are indeed divine fish searching for the water-hued radiant lord in his Vaikunta abode!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்