விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தனி வளர் செங்கோல் நடாவு,*  தழல் வாய் அரசு அவிய- 
  பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து,*  பார் முழுதும்- 
  துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து* 
  இனி வளை காப்பவர் ஆர்,*  எனை ஊழிகள் ஈர்வனவே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தனி வளர் - ஒப்பில்லாமல் வளருந்தன்மையுள்ள
செங்கோல் - (தனது ஒளியாகிய) அரசாட்சியை
ஈடாவு - (எங்கும் தடையின்றிச்) செலுத்துகிற
தழாய்வாய் அரசு - வெப்பம் வாய்ந்த ஸுர்யனாகிய அரசன்
அவிய - ஒழிய
 

விளக்க உரை

நாயகனைப் பிரிந்து ஆற்றமாட்டாத நாயகி இருளுக்கும் வாடைக்கும் கஷ்டப்பட்டுக் கூறும் பாசுரம் இது. செவிவாய் கண் முதலிய இந்திரியங்களானவை பகலில் பலபல வேறுவகைப்பட்ட பொருள்களை நாடியிருக்கக் கூடுமாதலால் நாயகனுடைய பிரிவை ஒருவிதமாக ஆற்றி நிற்கலாம்; இரவில் அப்படியல்லாமல் எல்லாப் பொருளும் அடங்க, இந்திரியங்களோடு மனம் நாயகனாகிற ஒரு பொருளையே நாடுதலாலும் கலவிக்கு உரிய காலமாதலாலும் அவ்விராப்பொழுதில் ஆற்றமாட்டாது வருந்துதல் இயல்பு. இப்பராங்குசநாயகியும் அங்ஙனே வருந்துகிறானென்க. உலகில், பேரரசன் செங்கோல் செலுத்தா நிற்குமளவில் சிற்றரசர்கள் தலையெடுக்க மாட்டார்கள்; பேரரசன் தலைசாய்ந்தால் உடனே சிற்றரசர்கள் தலைவிரித்தாடத் தொடங்குவார்கள்; அதுபோல, தன் ஒளியிலே சந்திரன் நக்ஷத்திரம் விளக்கு முதலிய எல்லாவொளிகளும் இருந்தவிடந் தெரியாதபடி மறைந்திடுமாறு தனிச் செங்கோல் செலுத்துமவனான ஸூரியனாகிய பேரரசன் தலை சாய்த்தவாறே இருளாகிய சிற்றரசு தான் தலைவிரித்தாடத் தொடங்கிற்று என்கிறான் முன்னடிகளால். ஸூர்யனுடைய உஷ்ணகிரகமும் அரசனுடைய பிரதாபமும் ஆகிய இரண்டு ‘தழல்வாய்’ என்றதனால் பெறப்படும். ஸூர்யாஸ்தமநத்தைச் சொல்ல வேண்டில் ‘சூரியன் மறைய’ என்னலாமே; அங்ஙனஞ் சொல்லாது ‘அவிய; என்றது- மீண்டும் ஸூர்யோதயம் ஆகக்காணாமல் இராப்பொழுதே நெடுகுவதாகத் தோன்றுதலால் ஸூர்யன் அழிந்தான் போலும் எனக்கருதி.

English Translation

The peerless golden rule of the fiery orb-and-screptre-Sun has ended. All the world over, fiefdomes of darkness have sprung up. Who can punish the anarchy of the cool breeze wafting with the destructive fragrance of the lord's adorable Tulase? Who can protect the law, who can protect our bangles? Alas, how many aeons will this last?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்