விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தடாவிய அம்பும்*  முரிந்த சிலைகளும் போகவிட்டு,* 
  கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும்,*  அசுரர் மங்கக்-
  கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்*
  நடாவிய கூற்றம் கண்டீர்,*  உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தடாவிய - வளைந்த
அம்பும் - பாணங்களையும்
முரிந்த - ஒடிந்த
சிலைகளும் - விற்களையும்
போகவிட்டு - கொள்ளாமல் ஒழித்து

விளக்க உரை

ஜ்ஞாநஸாதனங்களால், சிறந்து அமைதியோடிருக்கிற ஆழ்வாருடைய ப்ரபாவத்தைக் கண்ட அன்பரான பாகவதர் திருவுள்ள முகர்ந்து உலகத்தாரை நோக்கி ‘இவ்வாழ்வார் தம்மையடுக்கிற ஸம்ஸாரிகளை இவ்விருள் தருமாஞலாப் பிறப்பு நீக்கி முந்தராகச் செய்ய வல்லவர்; நீங்கள் ஸம்ஸாரத்திலேயே நிலைத்திருக்க விரும்புவீராயின், ஊரும் நாடு முலகமும் தம்மைப் போலே ஆக்கவல்ல இவர்க்கு வசப்படாமல் தப்பிப் பிழையுங்கள்’ என்று ஆழ்வார் தமது மஹிமையை வியந்து கூறும் பாகவதர் பரசுரமான உள்ளுறை பொருளமைந்த இப்பாட்டு- ஒரு நாயகியின் அழகிய வடிவத்தைக் கண்டு அதனிடத்து ஈடுபட்ட நாயகன் உலகத்தாரை நோக்கி ‘இவ்வடிவம் மேலெழப்பார்ப்பதற்கு ஒரு மெல்லியல் வடிவமாகத் தோன்றினாலும் உண்மையில் மன்மதனுடைய ஆஜ்ஸஞயை முழுவதும் தவறாமல் செலுத்துகிற ஒரு ம்ருத்யுவாகும்; இந்த உலகத்திலே ப்ரஸித்தனான ம்ருத்யுவைத் தப்பினாலும் தப்பலாம், இந்த ம்ருத்யுவைத் தப்புதல் அரிது; இது கண்டவர்களுயிரைத் தன்வசமாக்கிக் கொள்ளுந் தன்மையுடையதாதலால் உங்களுயிரை இதன் பக்கம் இழக்காமல் நீங்கள் குறிக்கொண்டு காத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லும் பாசுரமாக அமைக்கப்பட்டது. முற்கூறிய ஸ்வாபதேசார்த்தத்தில், தலைமகள் - ஆழ்வார்; தலைமகன்- பாகவதர்.

English Translation

From the litter of Madana's bent arrows and broken bows. She salvages the good ones. Looking like a pale creeper she retreats, but only to return. Run for your lives, ye world! She will strike death with Madana's screptre, on the fast bird-rider, Asura killer lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்