விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செழு நீர்த் தடத்துக்*  கயல் மிளிர்ந்தால் ஒப்ப,*  சேயரிக் கண்-
  அழு நீர் துளும்ப அலமருகின்றன,*  வாழியரோ- 
  முழு நீர் முகில் வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவர் ஆம்*
  தொழுநீர் இணை அடிக்கே,*  அன்பு சூட்டிய சூழ் குழற்கே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்பு சூட்டிய - தனது அன்பைச்செலுத்தின
சூழ் குழற்கு - அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு.
செழுநீர் தடத்து - மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல் - கயல்மீன்
மிளிர்ந்தால் ஒப்ப - பிறழ்ந்தாற்போல

விளக்க உரை

கீழ்ப்பாசுரம் ஆழ்வார் தரமான தன்மையிலருளிச் செய்தது. அத்தன்மை நீங்கிப் பெண்நிலைமை யெய்திப் பேசும் பாசுரம் இது. நாயிகாவஸ்தையையடைந்து பேசும் பேச்சுக்களில், தாய் பரசுரம் தலைவி பரசுரம் தோழி பாசுரம் என மூன்றுவகைகள் உண்டு. இப்பாட்டு தோழி பாசுரமாய்ச் செல்லுகிறது. தலைவி வேறுபாடுகண்ட தோழி வியந்துரைத்தல். நாயகிக்கு உண்டான வைலக்ஷண்யத்தைத் தோழியானவள் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போகிறாள். முதற்பாட்டில் ‘இமையோர் தலைவா! என்று எம்பெருமானுடைய உத்தம புருஷத் தன்மையை அநுஸந்திக்கையாலே அப்பொழுதே அவனைக் கிட்ட வேண்டும்படியான ஆசை கிளர்ந்து, அங்ஙனம் அவனைக் கிட்டப் பெறாமையாலே ஆழ்வார் ஆற்றாமை அதிகரித்துத் தளர்ந்தார்; அத்தளர்ச்சியாலே தரமான தன்மை யழநிது ஆண் பெண்ணாம்படியான நிலைமை தோன்றி ஒரு பிராட்டி நிலைமையடைந்தார். ஆழ்வார் என்னுந் திருநாமத்தையிழந்து ‘பராங்குச நாயகி’ என்ற பெயர் பெறலாயிற்று. தமக்குண்டான அன்பு நில¬மையைத் தம் வயாற் சொல்லிக் கொள்வதிற் காட்டிலும் வேற்று வாயாலே விளக்குதல் அழகியதாகத் தோன்றினமையால் தோழலி சொல்லுமாபோலே, சொல்லிக் கொள்ளுகிறார்.

English Translation

This coiffured girl gave her love garland to the perfect pair of feet of the lord of dark laden-cloud-hue, Kirshna, whom the celestias in heaven worship. Her red-lined eyes rain tears, and chase each other like warning fish in a big lake. Aho! Long live love!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்