விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொய் நின்ற ஞானமும்*  பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்,* 
    இந் நின்ற நீர்மை*  இனி யாம் உறாமை,*  உயிர் அளிப்பான்- 
    எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!* 
    மெய்ந் நின்று கேட்டருளாய்,*  அடியேன் செய்யும் விண்ணப்பமே.(2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உயிர் அளிப்பவன் - எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய் - பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய் - திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா - தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும் - பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும் - தீய நடத்தையும்

விளக்க உரை

உரை:1

ஆழ்வார் தம்முடைய ஞானக்கண்ணுக்கு இலக்கான- எம்பெருமானை நோக்கி ‘ஸ்வாமி!, அடியேனுடைய ஸம்ஸாரபந்தம் தொடர்ந்து வராமல் இவ்வளவோடு அற்றுப் போகுமாறு தேவரீர் அருள்செய்ய வேணுமென்று அடியேன் வணக்கத்துடன் சொல்லிக் கொள்ளும் வார்த்தையை திருச்செவி சார்த்தியருள வேணும்’ என்று பிரார்த்திக்கிறாரிதில். இதில் “இனியாமுறாமை” என்றவிடத்து, யாம் என்று பன்மையாகவும் முடிவில் ‘அடியேன்’ என்று ஒருமையாகவும் பிரயோகித்திருப்பதன் உட்கருத்தை கண்டுணரவேண்டும்: இப்போது தேவரீர் முன்னிலையில் நின்று விண்ணப்பம் செய்பவன் அடியேன் ஒருவனே யாகிலும், எவனொருவனுடைய அநர்த்தத்தைப் பரிஹரித்துக் கொள்வதற்காக மாத்திரம் அடியேன் விண்ணப்பம் பண்றுகிறேனல்லேன்; அடியேனும்கூட இவ்விருள் தருமா ஞாலத்தில் துவள்கின்ற மற்றும் பல ஸம்ஸாரிகளின் அநர்த்தமும் நீங்கவேணுமென்று அனைவர்க்கும் பிரதிநிதியாய் அடியேன் விண்ணப்பஞ்செய்கிறேன் என்பது உட்கருத்து. ‘பராநர்த்தம் நெஞ்சிலே படுகையாலே நாட்டுக்காகத் தாம் மன்றாடுகிறார்” என்பர் பெரியவாச்சான்பிள்ளை.

உரை:2

"மனிதனிடம் பொய் நிறைந்த ஞானம் உள்ளது. பொல்லாத ஒழுக்கம் உள்ளது. நல்லொழுக்கம் அவனிடம் இல்லை. அழுக்கேறிய உடல்தான் உள்ளது. சுத்தமான உடல் இல்லை. – இப்படிப்பட்ட மனிதப் பிறவியை வைத்துக்கொண்டு கடவுளைக் காண இயலவில்லை. எனவே அவன் “கடவுள் இல்லை’ என்று சொல்வது எவ்வளவு அபத்தம்.வானவர்களின் தலைவனே! இறைவனே! உலகினைக் காத்து அருளும் நீ, பல வகைப் பிறப்புகளை எடுக்கிறாய். நாங்களோ பொய்யே நிலைபெற்ற அறிவும் , தீய நடத்தையும், அழுக்குப் பதிந்த உடம்பும் கொண்ட மனிதப் பிறவியில் உழல்கிறோம். இப்படிப்பட்ட பிறவி அமையாதபடி நீதான் அருள வேண்டும்”"

English Translation

O Lord of Celestials! For the sake of protecting all souls, you took birth in several wombs! Grant that we may never again attain the lowly state of faulty knowledge, wicked actions and fifth-ridden body. This here is my humble petition, pray hear me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்