- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இப்பாட்டும் மேற்பாட்டும் காத்துப் பாசுரங்கள், திருக்கச்சி மாநகரில் திருக்கோயில் கொண்டிருக்கும் அஷ்டபுஜத் தெம்பெருமான் திருவடிகளே சரணம் என்கிறார். தொட்டபடை யெட்டும் தோலாத வென்றியான் – திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் திருவட்டபுயகரத் தெம்பெருமானை மங்களாசாஸ நஞ்செயும் திருப்பதிகத்தில் (2-8-3) “செம்பொன்னிலங்கு வலங்கை வாளி தின்சிலை தண்டொது சங்க மொள்வாள், உம்பரிருசுட ராழியோடு கேடக மொண்மலர் பற்றியெற்றே . . . அட்டபுயகரத்தே னென்றாரே“ என்ற பாசுரம் இங்கு அநுஸந்திக்கத்தகும். 1. வாளி, 2. சிலை, 3. தணடு, 4. சங்கம், 5. வாள், 6. ஆழி, 7. கேடகம், 8. மலர் ஆக திவ்யாயுதங்களெட்டையும் திருவுள்ளம் பற்றித் தொட்டப்டை யெட்டும் என்கிறாரிங்கு. இப்படைகளைக்கொண்டு எங்கும் வெற்றியே பெற்றுனருவானென்கிறது. இவற்றைத் தரிக்குமிடத்து ஒரு ஆயாஸமின்றியே பூவேந்தினாற்போலே எந்தியிருப்பது தோன்ற, ‘தொட்ட‘ எனப்பட்டது. அட்ட புயகரத்தான் – அட்ட புயகரத்திலுள்ளவன் எறு பொருள். ‘அஷ்டபுஜன்‘ என்பது எம்பெருமானுடைய திருநாமம். எட்டுத் திருக்கைகளையுடையவன் என்று பொருள். க்ருஹம் என்னும் வடசொல் கரமெத்திரியும், ஆகவே, அஷ்டபுஜனுடைய க்ருஹம் – அட்டபுயகரம். (திவ்யதேசத்தைச் சொன்னபடி) அவ்விடத்திலுள்ளவன் என்றதாயிற்று. ‘அட்ட புயவரகம்‘ என்பது அட்டபுயகரகம் என மருவிற்றென்றலும் பொருந்தும். அகரமாவது அக்ரஹாரம். திவ்யதேசத்தை முன்னிட்டே எம்பெருமானைப் பேசவேண்டுமென்னும் நியதி ஆழ்வார்கட்கு உள்ள தாதலால் ‘அஷ்டபுஜன்‘ என்னாமல் ‘அட்டபுயகரத்தான்‘ என்ன வேண்டிற்றென்ப. அப்பெருமான் பஞ்சேந்திரியங்களாகிற பலமுதலைகளின் வாயிலே அகப்பட்டுத் துடிக்கின்ற நம்மைக் காத்தருள வேண்டித் திருவட்டபுயகரத்திலே வந்து ஸந்நிதிபண்ணா நின்றான், அவன் திருவடிகளே தஞ்சம் – என்றாராயிற்று.
English Translation
With eight hands wielding eight victorious weapons tht have never seen defeat, the Lord of Attabusyakaram is our sole refuge. He wielded his discus over a crocodile and saved on elephant in the yore.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்