விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாழ்த்திய வாயராய்*  வானோர் மணிமகுடம்* 
  தாழ்த்தி வணங்கத் தழும்பாமே,* - கேழ்த்த
  அடித்தாமரை*  மலர்மேல் மங்கை மணாளன்,* 
  அடித்தாமரைஆம் அலர்.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மங்கை - பெரிய பிராட்டிக்கு
மணாளன் - வல்லபனான எம்பெருமானுடைய
அடி ஆம் தாமரை அலர் - திருவடிகளாகிற தாமரைப் பூக்களை
வானோர் - தேவர்
வாழ்த்திய வாயர் ஆய் - வாயால் வாழ்த்துகின்ற வராய்க்கொண்டு

விளக்க உரை

“வடிவிணையில்லார் மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி“ என்கிற படியே புஷ்பஹாஸஸுகுமாரமான திருக்கைகள் படைத்த பிராட்டிமார் பிடித்தாலும் கூசிப்பிடிக்க வேண்டும்படி அவ்வளவு ஸுகுமாரமான திருமால் திருவடிகள் – ஸர்வகாலமும் நித்யஸூரிகள் தமது மணிமகுடங்களைச் சாய்ந்து வணங்கப் பெறுதலால் தழும்பாமே என்று வயிறு பிடிக்கிறார். பொய்கையாழ்வார் “தழும்பிருந்த தாள் சகஞ்சாடி“ என்று –கிருஷ்ணாவதாரத்தில் சகடத்தைச் சீறி உதைத்ததனால் திருவடி தழும்பேறப் பெற்றதாக அருளிச்செய்தார், நித்யஸூரிகள் நித்தியம் வணங்குவதால் தழும்பேறி விடுவதாக இவ்வாழ்வார்ருளிச்செய்கிறார் கிரீடங்கள் பட்டுப்பட்டுத் திருவடிகள் காய்ப்பு காய்த்தல் தகும்.

English Translation

The lotus feet of the Lord, who is the spouse of the lotus dame lakshmi, are praised and worshipped by gem-crowned cestials till their mouths and foreheads develop festers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்