- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
திருமலையின் நிலவளத்தையும் ஓக்கத்தையும் ஒரு சமத்காரமாகப் பேசுகிறாரிதில். தேன் திரட்டுதல், வேட்டையாடி மிருகங்களைப் பிடித்துவருதல் முதலியன குறவர்களின் தொழிலாகும். இத்தொழில்கள் நல்ல வயதிலுள்ள குறவர்கட்குச் செய்ய இயலுமேயன்றி, கிழக்குறவர்கட்குச் செய்ய இயலா. ஆகவே, அவர்கள் கிருஷியினால் ஜீவிக்கப் பார்ப்பார்கள், அது தன்னிலும் தாங்களே உழுது பயிரிடுதலும் அவர்கட்கு இயலாது. கலப்பை பிடித்து உழமாட்டாத முடிந்தபொழுதிற்குறவாண ராதலால். பின்னை அவர்கள் என செய்வார்களென்னில், திருமலையிற் சில வீடாக மூங்கில்கள் வேர் பறியுண்டு விழத்தள்ளி அந்நிலங்களை மூக்காலே உரோசி ஒருகால் உழுதுவைக்கும், அத்தகைய நிலங்களிலே இக்கிழக்குறவர்கள் தினைகளை விதைத்து ஜீவிப்பார்கள். ஏற்கனவே பன்றிகள் தள்ளியிட்டிருந்த மூங்கில்கள் பயிர்க்குக்களையாக வொண்ணாதென்று அவற்றை இக்குறவர்கள் நன்றாகக் களைந்து போட்டுவிட்டுப் போனாலும் அவை நிலப்பண்பினால் பண்டுபோவே வளர்ந்து ஆகாசத்தை அளாவுகின்றனவாம். இப்படிப்பட்டநிலவளம் வாய்ந்த திருமலை முன்பு ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவ்வதரித்து வேணுகாநம் பண்ணின பெருமான் வாழுமிடம் என்றாராயிற்று. குறவர் தங்கள் சாதித்தொழிலை விட்டு க்ருஷியில் இறங்கினதற்குக் காரணங் கூறுவது போலும் ‘முடிந்தபொழுதின்‘ என்ற அடைமொழி. சரமதசையிலே யிருக்கின்ற குறவர் என்கை வாணர் –வாழ்நர் குறவராக வாழ்பவர்கள என்கை. சால் –‘ஒருசால் உழுத்து, இரண்டுசால் உழுத்து‘ என்று உலகவழக்க முள்ளமை உணர்க.
English Translation
Out old-age insurance is the hill of venkatam. When ageing gypsles plant rye in furrows made by wild boars and hefty Bamboos grow fall and unlock the treasure chest of rain in the sky. It is the abode of the sweet flute player Lord.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்