விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அது நன்று இது தீதுஎன்று*  ஐயப்படாதே,* 
  மதுநின்ற தண்துழாய் மார்வன்,* - பொதுநின்ற*
  பொன்அம் கழலே தொழுமின்,*  முழுவினைகள்
  முன்னம் கழலும் முடிந்து.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தொழுமின் - தொழுங்கோள், (அப்படி தொழுதால்)
முன்னம் - முந்துறவே
முழு வினைகள் - ஸம்ஸ்த பாபங்களும்
முடிந்து - உருமாய்ந்து
கழலும் - விட்டு நீங்கும்.

விளக்க உரை

உலகத்தாரை நோக்கி யுரைக்கிறார். நன்மை தீமைகளைப் பகுத்துணரு முணர்வு உங்களுக்கில்லாமையினால் ‘எது நல்லது, எது தீயது‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டே காலங்கழிப்பதைத் தவிர்ந்து, ‘பகவத் விஷயத்தில் ப்ராவண்யங் கொண்டிருப்பதே நன்று, ஸம்ஸாரத்தில் ஆசை கொண்டிருப்பது தீது‘ என்று உங்கட்கு நான் சொல்லும் விஷணத்தைத் திடமாகநம்பி, ஆச்ரித ரக்ஷணத்திற்குத் தனிமாலை யிட்டிருக்கு மெம்பெருமானுடைய ஸர்வஸாதாரணமான திருவடிகளைத் தொழுங்கோள், தொழுதாள் உங்களுடைய பரபங்களெல்லாம் தொலைந்து போம் என்கிறார். முதலடிக்குப் பொருள் – அது பகவத்விஷயமானது, நன்று நல்லது, இது – ஸம்ஸாரமானது, தீது – பொல்லாத்து, என்று – என்று நான் சொல்லுமிவ்விஷயத்தில், ஐயப்படாதே எவ்வளவுமாம். பொது நின்ற – எம்பெருமானுடைய திருவடிகள் ஸர்வஸாதாரண மென்னத் தட்டுண்டோ? ராவணசிசுபாலாதிகளுமுட்பட வந்து பணிந்தால் அங்கீகரிக்க ஸித்தமாயிருக்குந் திருவடிகளிறே. முழுவினைகள் முன்னம் கழலும் –தொழவேணுமென்று நினைத்தமாத்திரத்தில் பாவங்கள் தொலையுமென்கை. ‘முடிந்து‘ என்றதனால் அப்பாவங்கள் வேறொருவரிடத்திற் போய்ச் சேர்வதற்கில்லாமே உருமாய்ந்து ஒழியுமென்பது பெற்ப்படும்.

English Translation

Knowing what is good and what is bad without a doubt, worship the golden feet of the Lord who stands accessibly with a Tulasi garland on his chest. All our karmas will vanish without a trace belore we age.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்